20 ஆண்டுகளுக்கு முன், ஹாங்காங், தாய்நாட்டுக்குத் திரும்பியது. கடந்த 20 ஆண்டுகாலத்தில், ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தில் அடிப்படை சட்டம், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் அடிப்படை சட்டத்தினை நன்றாக அறிந்தவர், தென் ஹுய் சூ அம்மையார் ஆவார். வழக்கறிஞரும், அடிப்படை சட்டத்தை வகுத்த கமிட்டியின் உறுப்பினருமான அவர், இவ்வடிப்படை சட்டத்தினை வகுக்கும் பணியில் கலந்துகொண்டவர் ஆவார்.
ஹாங்காங்கின் மீது, நடுவண் அரசின் கொள்கை தளர்ச்சியானது. ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தி, ஹாங்காங்கின் செழுமையை நனவாக்கும் வகையில், உலகளவில் எளிதாக கிடைக்க முடியாத தன்னாட்சி உரிமையை, நடுவண் அரசு, ஹாங்காங்குக்கு அளித்தது என்று அடிப்படை சட்டத்தை வகுத்த போக்கை மீளாய்வு செய்த போது அவர் கூறினார்.
அவர் கூறியதாவது—
ஹாங்காங்கின் மீது, தளர்ச்சியான கொள்கைகளை நடுவண் அரசு வகுத்துள்ளது. கடவுச்சீட்டையும், சொந்த தாள் பணத்தையும் ஹாங்காங் வெளியிடலாம். இது, உலகில் குறைவாகக் காணப்படும் தளர்ச்சியான கொள்கை ஆகும் என்றார் அவர்.
ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய 20 ஆண்டுகாலத்தில், ஹாங்காங்கில் வளர்ச்சியையும் செழுமையையும் உருவாக்க அடிப்படை சட்டம் உத்தரவாதம் செய்தது. குறைவான வரி விகிதம், சுதந்திர துறைமுகம், சொந்த நிதியுரிமை ஆகியவை, ஹாங்காங்கின் அமைப்பு முறை சரியாக செயல்பட உத்தரவாதம் செய்தன. உலக வர்த்தக அமைப்பு, விமான இறங்குதல் உரிமை ஆகிய சர்வதேச அமைப்புகளிலுள்ள தகுநிலையையும் ஹாங்காங் கொண்டிருக்கிறது. இவை, ஹாங்காங்கின் வளர்ச்சிக்குத் துணை புரியும் என்று தென் ஹுய் சூ தெரிவித்தார்.
சமீபத்தில், நடுவண் அரசுக்கும், ஹாங்காங் அரசுக்குமிடையிலான உறவில், ஹாங்காங் சமூகம் மேலதிக கவனம் செலுத்தி வருகின்றது. சீனாவின் சிறப்பு நிர்வாக பிரதேசமான, ஹாங்காங்கின் அனைத்து உரிமைகளும், நடுவண் அரசிடமிருந்து கிடைக்கப் பெற்றவை. சீனாவின் அரசியல் அமைப்புச் சட்டம், ஹாங்காங் அடிப்படை சட்டத்திற்கு உரிமையளித்தது.
சீன அரசைக் கவிழ்க்க முயற்சி செய்வது, நாட்டிற்குத் துரோகம் செய்வது, நாட்டைப் பிரிக்க நினைப்பது ஆகியவை குறித்து, ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேச அரசு, சொந்த சட்டங்களை வகுக்க வேண்டும். இவை, அடிப்படை சட்டத்தின் 23ஆவது பகுதியின் அம்சமாகும். ஹாங்காங் தனியாகச் சட்டத்தை வகுக்கலாம் என்பதற்கு நடுவண் அரசு அனுமதி அளித்துள்ளது. இது மிக தனிச்சிறப்பானது என்று அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு, ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய 20வது ஆண்டு நிறைவாகும். ஹாங்காங் அடிப்படைச் சட்டத்தின் படி, ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்" என்ற கொள்கையில் ஊன்றி நின்று, நடுவண் அரசின் ஆதரவில், ஹாங்காங்கின் வளர்ச்சியும் செழுமையும் தொடரும் என்று தென் ஹுய் சூ நம்புக்கை தெரிவித்தார்.
(கலைமணி)