பிரிக்ஸ் நாடுகளின் தலைவர் பதவி வகிக்கும் நாடாக சீனா பொறுப்பு ஏற்றுள்ள காலத்தில் நடைபெற்ற 2ஆவது பிரிக்ஸ் நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி தலைவர்கள் கூட்டம் 19ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கை குறித்து, ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பிரிக்ஸ் நாடுகள் மற்றும் உலகின் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றி, ஜி 20 நிதி துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இத்துறையின் ஒத்துழைப்பு சாதனை ஆவணம் குறித்துப் பொதுக் கருத்தை எட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்புகளும் வலியுறுத்தின. ஷாங்காய் மாநகரில் நடைபெற்ற இக்கூட்டம், நிறைய சாதனைகளைப் பெற்றுள்ளது. இதோடு, செப்டம்பர் திங்களில், ஷியாமேன் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கும் ஆயத்தம் செய்துள்ளது என்று சீன நிதியமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.
இக்கூட்டத்தில் பல்வேறு தரப்புகள், 9 பொதுக் கருத்துகளை எட்டியுள்ளன. புதிய வளர்ச்சி வங்கியின் வளர்ச்சியை முன்னேற்றி, பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு மேடையின் பயனை வெளிக்கொணர்வது, இக்கூட்டத்தில் எட்டப்பட்ட முதல் பொது கருத்தாகும்.
இத்துடன், நிதி மற்றும் நாணய துறையில், பிரிக்ஸ் நாடுகள் எட்டிய மிக முக்கிய சாதனை, புதிய வளர்ச்சி வங்கியாகும். இவ்வங்கி இயங்க துவங்கிய இரு ஆண்டுகாலத்தில், 7 திட்டப்பணிகளை அங்கீகரித்து, 155 கோடியே 50 இலட்சம் அமெரிக்க டாலர் கடன் வழங்குவதற்கு வாக்குறுதி அளித்து, 300 கோடி ரென் மின் பி மதிப்புள்ள கடன் பத்திரத்தை வெளியிட்டுள்ளது. எதிர்காலத்தில், புதிய வளர்ச்சி வங்கி, சரியாகச் செயல்பட்டு, உலக பொருளாதார வளர்ச்சி நிர்வாகத்துக்கு பங்காற்ற வேண்டும் என்று சீன துணை நிதியமைச்சர் ஷி யாவ் பின் விருப்பம் தெரிவித்தார்.
அரசு நிதிக்கும் சமூக நிதிக்குமிடையிலான ஒத்துழைப்பு கட்டுகோப்பை உருவாக்கி, இத்துறையில், பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கு ஆயத்தம் செய்ய வேண்டும். இது, இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு தரப்புகளின் இன்னொரு பொதுக் கருத்து ஆகும்.
ஒட்டுமொத்த பொருளாதார கொள்கை குறித்து, ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி பிரிக்ஸ் நாடுகள் மற்றும் உலகின் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவது, ஜி 20 நிதி துறையில் பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி பொது கருத்துகளை எட்டுவது, கணக்கு தணிக்கை துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது முதலியவை, இக்கூட்டத்தில் எட்டப்பட்டுள்ள பொது கருத்துகளாகும்.
இந்த நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி தலைவர்கள் கூட்டம், நிறைய சாதனைகளை பெற்றுள்ளது. இனிமேல், புதிய வளர்ச்சி வங்கியின் பயனை விரிவாக்க வேண்டும் என்று தென்னாபிரிக்க நிதியமைச்சர் ஜிகாபா கருத்து தெரிவித்தார்.
(கலைமணி)