• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கு முக்கிய ஆதாரத்தூண்கள்
  2017-06-20 18:29:48  cri எழுத்தின் அளவு:  A A A   
பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பில், திறப்பு, அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி ஆகியவை படைத்த பிரிக்ஸ் எழுச்சி எப்போதுமே பின்பற்றப்படுகிறது. அரசியல் மற்றும் இராணுவ கூட்டணியை உருவாக்காத பிரிக்ஸ் நாடுகள் இதர நாடுகளுடன் மனிதகுலத்தின் பொது சமூகத்தைக் கட்டியமைக்க விரும்புகின்றன என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் 20ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

பிரிக்ஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை 19ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இது தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கையில், பிரிக்ஸ் நாடுகள் செல்வாக்குமிக்க நாடுகளாகும். சர்வதேச நிலைமை பற்றி 5 நாடுகள் கருத்துக்களைப் பரிமாறி நிலைப்பாட்டை ஒருங்கிணைப்பது இயல்பே. அரசியல் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் நிதி, மானிட பண்பாட்டுப் பரிமாற்றம் ஆகியவை, பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கான மூன்று முக்கிய ஆதாரத்தூண்களாக மாறியுள்ளன என்று கெங் ஷுவாங் குறிப்பிட்டார்.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040