• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-ஆப்பிரிக்க ஒன்றியம் ஒத்துழைப்பு வளர்ச்சி
  2017-06-22 09:36:24  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ 21ஆம் நாள் ஆப்பிரிக்க ஒன்றிய குழுவின் தலைவர் மௌசா ஃபகியுடன் அடீஸ்அபாபாவில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சீனாவும் ஆப்பிரிக்க ஒன்றியமும் ஒத்துழைத்து நன்மை பெறுவதன் வழி, கூட்டாக வளர்ப்பதன் புதிய காலத்தை துவங்கியுள்ளன என்று வாங் யீ கூறினார். ஆப்பிரிக்காவில் நீண்டகாலமாக நீடிக்கும் அமைதியையும் தொடரவல்ல வளர்ச்சிப் போக்கையும் நனவாக்குவதில் ஆப்பிரிக்க ஒன்றியம் மேலும் பெரும் பங்காற்றவும் புதிய ஆப்பிரிக்க ஒன்றிய குழுவுடன் இணைந்து, நெருங்கிய கூட்டாளி உறவை உருவாக்கவும் வேண்டுமென சீனா விருப்பம் தெரிவிப்பதாக வாங் யீ கூறினார்.

ஆப்பிரிக்க ஒன்றியமும் சீனாவும் நெருங்கிய தொடர்பு மேற்கொண்டு, பல துறைகளில் ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகின்றன. ஆப்பிரிக்க ஒன்றியம்-சீன உறவு வளர்ச்சிக்கு மேலதிக பங்காற்ற வேண்டுமென ஆப்பிரிக்க ஒன்றியம் விருப்பம் தெரிவிப்பதாக மௌசா ஃபகி கூறினார்.(மோகன்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040