• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
முதலாவது சுற்று சீன-அமெரிக்க தூதாண்மை மற்றும் பாதுகாப்பு பேச்சுவார்த்தை
  2017-06-22 14:35:38  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசவை உறுப்பினர் யாங் ஜியே ச்சியும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரேக்ஸ் திலேர்சன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மேட்டீசும் 21ஆம் நாள் வாஷிங்டனில் முதலாவது சுற்று சீன-அமெரிக்க தூதாண்மை மற்றும் பாதுகாப்பு பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கினர்.

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும், அமெரிக்க அரசுத் தலைவர் டோனல்ட் டிரம்பும் மார் அ லாகோ பண்ணையில் வெற்றிகரமாக சந்திப்பு நடத்தியது, சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சிக்கு திசையை வழிகாட்டியுள்ளது. இரு நாட்டு அரசுத் தலைவர்களின் வழிகாட்டலுடன், இரு நாட்டு உறவு புதிய ஆக்கப்பூர்வ முன்னேற்றம் அடைந்து வருகின்றது என்று யாங் ஜியே ச்சி சுட்டிக்காட்டினார்.

இரு நாட்டு அரசுத் தலைவர் உருவாக்கிய முக்கியப் பொது கருத்துக்கிணங்க, ஒன்றுக்கொன்று நன்மை பயக்கும் ஒத்துழைப்புத் துறைகளை விரிவாக்க பாடுபடும் என்றும், ஒன்றுக்கொன்று மதிப்பளிக்கும் அடிப்படையில் கருத்து வேற்றுமையை நீக்கி, இரு நாட்டுறவின் நீண்டகால சீரான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றும் இரு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். இரு நாட்டு உயர் நிலை தலைவர்களிடையேயான தொடர்பை நிலைநிறுத்துவது மிகவும் முக்கியமானது என்றும், கூட்டு முயற்சிகளுடன், இவ்வாண்டு ஜூலை திங்கள் ஹான்பெர்க் நகரில் நடைபெறும் 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டின் போது இரு நாட்டு அரசுத் தலைவர்களின் சந்திப்பு ஆக்கப்பூர்வ சாதனைகளை பெறும் என நம்புவதாகவும் இரு தரப்பினரும் தெரிவித்தனர். இவ்வாண்டுக்குள், பன்முகப் பொருளாதாரம், சட்ட அமலாக்கம் மற்றும் இணையப் பாதுகாப்பு, சமூகம் மற்றும் மானுடப் பண்பாடு உள்ளிட்ட உயர் நிலை பேச்சுவார்த்தை அமைப்பு முறையின் முதலாவது சுற்று பேச்சுவார்த்தையைச் செவ்வனே நடத்துவதை இரு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

சீனா தொடர்ச்சியாகவும், விரைவாகவும் வளர்ந்து வருவதை அமெரிக்கா கண்டுள்ளது. சீனாவைக் கட்டுப்படுத்தி பலவீனப்படுத்தும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை என்று அமெரிக்கத் தரப்பினர் தெரிவித்தனர். சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நீண்டக்கால ஆக்கப்பூர்வ உறவை வளர்க்க வேண்டும் என அமெரிக்கா விரும்புவதாகவும், பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம், ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் அமைதி, நிதானம் மற்றும் செழுமையை விரைவுபடுத்த இரு தரப்பும் பாடுபட வேண்டும் என்றும் அமெரிக்க தரப்பினர் தெரிவித்தனர்.

தவிர, தைவான் மற்றும் திபெத் பிரச்சினை, கொரியத் தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை, தென் சீனக் கடல் பிரச்சினை, பயங்கரவாத எதிர்ப்பு பிரச்சினை முதலியவை பற்றி இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040