• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகரின் இஸ்ரேல் பயணம்
  2017-06-22 15:29:19  cri எழுத்தின் அளவு:  A A A   
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குவதை முன்னேற்றும் வகையில், அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகர் ஜேரெட் கோரே குஷ்னெர், இஸ்ரேல் தலைமையமைச்சர் பெஞ்சமின் நெதன்யாஹூவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இஸ்ரேலில் நடந்த இந்தச் சந்திப்பு, பிரதேச பாதுகாப்பு, செழுமை மற்றும் அமைதியைத் தேடும் பொது இலக்கிற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது என்று நெதன்யாஹூ கூறினார்.

பாலஸ்தீன-இஸ்ரேல் பன்முகமான அமைதி உடன்படிக்கையை முன்னேற்றும் அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்பின் வாக்குறுதியைச் செயல்படுத்துவது, குஷ்னெரின் பயணத்தின் நோக்கமாகும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியது.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040