• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் வளர்ச்சி
  2017-06-23 09:31:27  cri எழுத்தின் அளவு:  A A A   

1997ஆம் ஆண்டின் ஜூலை முதல் நாள், ஹாங்காங் மீதான அரசுரிமையை சீனா மீண்டும் பெற்றது. ஹாங்காங் சீனாவிற்குத் திரும்பி 20 ஆண்டுகள் ஆன நிலையில், ஹாங்காங்வில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஒவ்வொரு புதின் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ஹாங்காங்கின் குதிரை போட்டி விளையாட்டு அரங்குகளில், குதிரை போட்டிகள் திட்டத்திற்கிணங்க நடைபெற்று வருகின்றன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்தக் குதிரை போட்டிகளைப் பார்த்து ரசிக்கின்றனர். தற்போது வரை, குதிரை போட்டியைக் காண்பது, ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச மக்களால் மிகவும் வரவேற்கப்படுகின்ற நடவடிக்கைகளில் ஒன்றாக திகழ்கின்றது.
இச்சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் முதலாவது நிர்வாக அதிகாரி தோங் ச்சியான் குவாவை பொறுத்தவரை, இங்குள்ள மக்களின் வாழ்க்கை வழிமுறை மாறாமல் இருக்கும் நிலைமையில், சீனப் பெருநிலப் பகுதியுடன், ஹாங்காங் மேலும் நெருக்கமாகத் தொடர்பு கொண்டு வருகிறது. ஹாங்காங் நகரவாசிகளின் பொருளாதார மற்றும் பண்பாட்டு வாழ்க்கையில் இது நாளுக்கு நாள் செல்வாக்கினை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து, தோங் ச்சியான் குவா கூறியதாவது

ஹாங்காங்கில் வாழ்கின்ற மக்களின் அன்றாட பழக்கவழக்கங்கள் பெரிதும் மாறவில்லை. ஆனால், தற்போது, மேலதிகமான மக்கள், சீன மொழி பேசுகின்றார்கள். தாய்நாடு பற்றிய தகவல்களை மக்கள் மேலதிகமாக அறிந்துகொள்கின்றனர். திறமைசாலிகள் மற்றும் பொருளாதாரத் துறையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டு, சீனப் பெருநிலப் பகுதி மீதான ஹாங்காங்வின் சார்பளவு அதிகரித்துள்ளது. ஆனால், இதற்கு முன்பு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் வர்த்தக நடவடிக்கையை ஹாங்காங் மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது என்றார் அவர்.


தற்போது ஹாங்காங், சீனப் பெருநிலப் பகுதியுடன் இணைந்து, பொருளாதாரம், சமூகம் மற்றும் பண்பாட்டு ஒத்துழைப்பை அதிகம் மேற்கொள்வதோடு, மேலதிகமான ஹாங்காங் இளைஞர்கள், சீனப் பெருநிலப் பகுதிக்குச் சென்று, கல்வி பெற்றும் தொழில் துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஹாங்காங்வின் இளைஞர் சங்கம் வெளியிட்ட ஆராய்ச்சியின்படி, ஹாங்காங்கின் தொழில் முனைவோர்களில் மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள், சீனாவின் பிற பெருநிலப் பகுதியில் தொழில் புரிய விரும்புகின்றனர்.
ஹாங்காங் தொழில் முனைவோரும், காவ்ஃபான் குழுமத்தின் முதல் தலைவருமான வூ ஜெய் ச்சுவாங், சீனப் பெருநிலப் பகுதியில் தொழில் நடத்துகின்றார். 2004ஆம் ஆண்டு, அவர், சிங்குவா பல்கலைக்கழகத்தின் முனைவர் படிப்பிற்கான தேர்வில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றுள்ளார். இப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற முதலாவது ஹாங்காங் இளைஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


சீனப் பெருநிலப் பகுதியில் தொழில் புரிவதுன் போது, தொழில் நுட்பத்தை அதிகரித்து, எமது தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களை, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விற்பனை செய்ய முடியும் என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040