1935ஆம் ஆண்டு செப்டம்பர், மத்திய செம்படை தேய்பு வட்டத்தைச் சென்றடைந்தது. மா சே துங் ஸிரினா ஊரிலுள்ள ஒரு கட்டிடத்தில் தங்கியிருந்தார். மூன்று நாட்களில் லாஸிகோ போரை வெல்ல அவர் அந்த இடத்தில் தான் கட்டளையிட்டார். உள்ளூர் திபெத் இனத் தலைவர் யாங் ஜி ஜிங் செம்படைக்கு தானிய உணவு உதவி அளித்தார். அதனால், தேய்பு வட்டம், செம்படையின் நீண்ட நடைபயணத்தின் எரிவாயு நிலையம் என மக்கள் பாராட்டி வருகின்றனர்.
மா சே துங் வசித்த கட்டிடமும் செம்படையினர் பயன்படுத்திய பொருட்களும் நன்றாகப் பேணிக்காக்கப்பட்டு வருகின்றன. இக்கட்டிடத்தின் உரிமையாளர் பயணிகளுக்கு அப்போதைய கதையை விளக்கி வருகிறார். 2006ஆம் ஆண்டு அது வரலாற்றுச் சிறப்புமிக்க அரிய இடங்களில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளது.