• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானிஸ்தான் அரசுத் தலைவர்-சீன வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை
  2017-06-25 15:45:26  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆப்கானிஸ்தான் அரசுத் தலைவர் அஷ்ரஃப் கானி, அந்நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீயை ஜூன் 24ஆம் நாள் காபூலில் சந்தித்துரையாடினார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை, சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை ஆகியவற்றின் முக்கிய பாலமாக ஆப்கானிஸ்தான் திகழ்கிறது. சீனாவுடன் இணைந்து, பொருளாதார மற்றும் வர்த்தகம், முதலீடு, மின்னாற்றல், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த ஆப்கானிஸ்தான் விரும்புவதாக அஷ்ரஃப் கானி தெரிவித்தார்.

வாங்யீ பேசுகையில், ஆப்கானிஸ்தான் உள்நாட்டில் இணக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிப் போக்கைச் சீனா உறுதியாக ஆதரித்து வருகிறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுக்கோப்புக்குள் இரு நாடுகளின் பயன்தரும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். மேலும், பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்தி, ஒன்றுடன் ஒன்று நம்பிக்கையை உருவாக்கி, ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கிறது என்று தெரிவித்தார். (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040