• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ரஷியா மற்றும் ஜெர்மனியில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் மேற்கொள்ளவுள்ள பயணம்
  2017-06-29 18:34:30  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜுலை 3ஆம் நாள் முதல் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் ரஷியா மற்றும் ஜெர்மனியில் அரசுமுறைப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். மேலும் ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடைபெறும் 20 நாடுகள் குழுவின் உச்சிமாநாட்டிலும் அவர் கலந்து கொள்வார். சீன வெளியுறவு அமைச்சகம், சீன வணிக அமைச்சகம் ஆகியவை வியாழக்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இப்பயணம் பற்றி எடுத்து கூறியுள்ளன.
ரஷிய பயணம் பற்றி கூறுகையில், ஆழமான பரிமாற்றம் மேற்கொண்டு சீன-ரஷிய உறவின் எதிர்கால வளர்ச்சிக்கு இரு நாடுகளின் தலைவர்கள் கூட்டாக நெடுநோக்கு திட்டத்தை வகுப்பர் என்று சீன வெளியுறவு அமைச்சரின் உதவியாளர் லீ ஹுய் லாய் கூறினார். சீன-ரஷிய சுமுகமான அண்டை நாட்டு ஒத்துழைப்பு உடன்படிக்கையின் 2017-2020 செயல்பாட்டு சுருக்கம் உள்ளிட்ட 10க்கும் அதிகமான முக்கிய ஆவணங்களில் இரு தரப்பும் கையொப்பமிடும். தவிரவும், சீன-ரஷிய நட்பார்ந்த அமைதி மற்றும் வளர்ச்சி ஆணையம் நிறுவப்பட்ட 20ஆம் ஆண்டு நிறைவையும் ரஷிய-சீன நட்புறவுச் சங்கம் நிறுவப்பட்ட 60ஆம் ஆண்டு நிறைவையும் முன்னிட்டு, இரு நாடுகளிலும் பல நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பயணத்தின் போது, இரு நாடுகளைச் சேர்ந்த நட்பார்ந்த பிரமுகர்களை இரு நாட்டுத் தலைவர்கள் கூட்டாக சந்திக்கவுள்ளனர் என்று தெரிகிறது.
இவ்வாண்டு சீன-ரஷிய வர்த்தக தொகை 8000 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டக் கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் துறையிலான சீரான உறவு இரு நாட்டு பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவின் வளர்ச்சிக்கு ஆதாரம் அளித்துள்ளது என்று சீன வணிகத் துறையின் துணை அமைச்சர் வாங் சோவென் கூறினார்.
ஜெர்மனி பயணம் பற்றி சீனத் துணை வெளியுறவு அமைச்சர் வாங் சாவ் கூறுகையில், இவ்வாண்டு சீன-ஜெர்மனி தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 45ஆவது ஆண்டு நிறைவாகும். சீன-ஜெர்மனி உறவின் வளர்ச்சிக்கு இப்பயணம் புதிய இலக்கை உறுதி செய்யும் என்றும், அமைதி, வளர்ச்சி, சீர்திருத்தம், நாகரிகம் ஆகிய 4 துறைகளில் சீனாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான உறவை நிறுவுவதற்கான புதிய ஆற்றலை இப்பயணம் வழங்கும் என்றும் வாங் சாவ் கூறினார்.
கடந்த ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற 20 நாடுகள் குழுவின் உச்சிமாநாட்டில் கட்டமைப்புச் சீர்திருத்தம், எண்ணியல் பொருளாதாரம் ஆகியவை பற்றி பல பொது கருத்துக்கள் எட்டியுள்ளன. ஹாம்பர்க்கில் நடைபெறும் புதிய உச்சிமாநாட்டில் இந்த பொது கருத்தகளை நடைமுறைப்படுத்தி, வெளிப்படைத் தன்மை வாய்ந்த உலக பொருளாதாரத்தைத் தொடர்ந்து கட்டியமைத்து, புத்தாக்க வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்ற வேண்டும் என்றும் 20 நாடுகள் குழுவின் ஒற்றுமை, ஒத்துழைப்பு ஆகிய ஆக்கப்பூர்வ சமிக்கையை வெளியுலகத்துக்கு செரியப்படுத்த வேண்டும் என்றும் சீனா விரும்புகின்றது.
இம்மாநாட்டின் போது பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பை நடத்தவுள்ளனர். வழக்கப்படி இவ்வமைப்பின் நடப்பு தலைவர் நாடான சீனா இதற்குத் தலைமை தாங்கும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040