ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வகையில், சீனக் கமியூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பீங் வெள்ளிக்கிழமை நண்பகல் சிறப்பு விமானம் மூலம் ஹாங்காங் சென்றடைந்தார்.
ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் அவர் பேசுகையில்,
ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசம் நிறுவப்பட்ட 20 ஆண்டுகளில் பெற்ற மாபெரும் சாதனைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதும், ஹாங்காங்கின் வளர்ச்சிக்கும் மக்கள் வாழ்க்கையின் மேம்பாட்டுக்கும் மத்திய அரசு தொடர்ந்து உறுதியான ஆதரவு தெரிவிப்பதும், ஹாங்காங்கின் பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த பிரமுகர்களுடன் இணைந்து எதிர்காலத்தை நோக்கி அனுபவங்களைத் தொகுத்து ஒரு நாட்டில் இரண்டு அமைப்புமுறைகள் என்ற கொள்கையின் நடைமுறையாக்கத்துக்கு உத்தரவாதம் அளிப்பதும், இப்பயணத்தின் முக்கிய நோக்கங்களாகும் என்று கூறினார்.
பிறகு, ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் அதிகாரி லியுங் ச்சுன்யிங்கை அவர் சந்தித்துரையாடினார். கடந்த 5 ஆண்டு பதவிக்காலத்தில் லியுங் ச்சுன்இங் மேற்கொண்ட பணிகளை அவர் உயர்வாக மதிப்பிட்டார். புதிய பதவியில் ஹாங்காங் மற்றும் நாட்டுக்குத் தொடர்ந்து சேவை புரிந்து ஒரு நாட்டில் இரண்டு அமைப்புமுறைகள் என்ற இலட்சியத்துக்கும் சீனாவின் வளர்ச்சிக்கும் தனது அறிவுகளையும் ஆற்றலையும் வெளிப்படுத்துமாறு லியுங் ச்சுன்யிங்கிற்கு அவர் ஊக்கம் அளித்தார்.
பிற்பகல், லியுங் ச்சுன்யிங்குடன், ஷி ச்சின்ப்பீங் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நடப்பு நிர்வாகம், சட்டமியற்றல், நீதி முதலிய வாரியங்களின் பொறுப்பாளர்களைச் சந்தித்துரையாடினார். ஹாங்காங்கில், ஒரு நாடு இரண்டு அமைப்புமுறைகள் என்ற கொள்கையின் நடைமுறையாக்கம் மிகவும் வெற்றிகரமானது என்று ஷி ச்சின்பிங் சந்திப்பின்போது சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கூறியதாவது
ஒரு நாட்டில் இரண்டு அமைப்புமுறைகள் என்ற கொள்கையின்படி, ஹாங்காங் அமைதியான முறையில் தாய்நாட்டுக்கு திரும்பியது. ஆட்சிப் பிரதேசத்தை திரும்பப் பெறும் வகையில் பெரும் மோதல் ஏற்படும் என்ற கூற்று, ஹாங்காங்கில் ஏற்படவில்லை. ஹாங்காங்கின் நடைமுறை, உலக வரலாற்றில் அரியதாக காணப்பட்டதாகும். ஆசிய நிதி நெருக்கடி, சார்ஸ் தொற்று நோய் தாக்கம், சர்வேத நிதி நெருக்கடி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட போதிலும், ஹாங்காங் இன்னும் செழுமையாகவும் நிலைத்தன்மையாகவும் வளர்ந்து வந்தது. ஒரு நாட்டில் இரண்டு அமைப்புமுறைகள் என்ற கொள்கை முற்றிலும் சரியானதாகவும் உயிராற்றலாகவும் உள்ளதை நடைமுறையாக்கம் நிரூபித்துள்ளது.
ஹாங்காங்கின் நடப்பு நிர்வாகக் குழுவின் பணிகளை நடுவண் அரசு உயர்வாகப் பாராட்டுகிறது என்று ஷிச்சின்பிங் பாராட்டு தெரிவித்தார். அனைவரும் தொடர்ந்து ஹாங்காங் மற்றும் தேசிய வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மேலும் அருமையான ஹாங்காங்கை உருவாக்கி, சீன தேசத்தின் பெரும் மறுமலர்ச்சி என்ற கனவை நனவாக்கில் புதிய பங்கினை ஆற்ற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.