• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அதிவிரைவு தொடர்வண்டி வசதிமயமாக்கம்
  2017-07-04 10:49:56  cri எழுத்தின் அளவு:  A A A   

முழுமையான சொந்தமான அறிவுசார் சொத்துரிமை கொண்ட ஃபூசிங்ஹாவ் தொடர்வண்டி, சீன இருப்புப்பாதை நிறுவனத்தின் தலைமையில், உலகின் முன்னிலையில் வகிக்கிற நவீன அதிவிரைவு தொடர்வண்டியாகும். இத்தொடர்வண்டி, பெய்ஜிங்-ஷாங்காய் உயர்வேக இருப்புப் பாதையில் இயங்கத் தொடங்கியுள்ளது. அதே வேளை, அதிவிரைவு தொடர்வண்டியின் வளர்ச்சியில் சீனச் சமூகம் அதிகமான கவனம் செலுத்தி வருகிறது. அதிவிரைவு தொடர்வண்டி யுகம் வந்துள்ளது. இதன் மூலம், பொது மக்களின் வாழ்க்கையில் மாபெரும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதனுடன் சீனாவின் பல்வேறு நகரங்களுக்கிடையில் இடைவெளி பெரிதும் சுருங்கியுள்ளது.


கடந்த ஆண்டில், சுமார் 200 அதிவிரைவு தொடர்வண்டி சீட்டுகளை வாங்கினேன். பெறும்பாலான சீட்டுக்கள், யாங்சி கழிமுகப் பிரதேசங்களில் பயணம் மேற்கொண்ட போது வாங்கப்பட்டன என்று பயணி திரு சியா தெரிவித்தார்.
திரு சியா, சியாங்சு மாநிலத்தின் சுசோ நகரிலுள்ள வணிக இடர் கட்டுப்பாட்டு ஆலோசனை நிறுவனத்தில் பணி புரிகின்றார். கிழக்கு சீனாவிலுள்ள சியாங்சு, சான்தோங், ஆன் வெய், ஷெச்சியாங், ஃபூச்சியென், ஷாங்காய் முதலிய பிரதேசங்களின் அலுவல்களில் அவரது நிறுவனம் ஈடுபடுகின்றது. எனவே, இந்த பிரதேசங்களில் பணிப் பயணம் அவர் அடிக்கடி மேற்கொள்ள வேண்டும். அதிவிரைவு தொடர்வண்டி இயங்குவதற்கு முன்பு, பயணப் பேருந்தில் அல்லது வாகனங்களை ஓட்டுவது, அவரது தெரிவு. ஒரே நாளில், ஒரு நகரில் பணி பயணம் மேற்கொண்டு, வாடிக்கையாளர் ஒருவரை மட்டுமே சந்திக்கலாம். அதிவிரைவு தொடர்வண்டி இயக்கப்பட்ட பிறகு, அவரது நிறுவனத்தின் சேவையின் பரவல் வேகமும், சேவை வழங்கும் வேகமும் பெரியளவில் அதிகரித்துள்ளன.


2010ஆம் ஆண்டு முதல், ஷாங்காய்-நிங் போ அதிவிரைவு தொடர்வண்டி, ஷாங்காய்-ஹாங்சோ அதிவிரைவு தொடர்வண்டி முதலியவை அடுத்தடுத்து இயக்கப்படுவதுடன், ஷாங்காய், நான்ச்சிங், ஹாங்சோ ஆகிய மூன்று நகரங்களை மையமாக் கொண்ட யாஞ்சி கழிமுகப் பிரதேசங்களுக்கிடையில் அதிவிரைவு தொடர்வண்டி இணையம் ஏற்கனவே உருவாகியுள்ளது. இந்நகரங்களுக்கிடையில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கு தேவையான நேரம் பாதி அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதிவிரைவு தொடர்வண்டியின் வலைப்பின்னல்கள் நாளுக்கு நாள் மேம்படுவதோடு, இதற்கிடையில் பயணம் மேற்கொள்கின்ற பயணிகள், தொடர்வண்டி வசதிமயமாக்கத்திலிருந்து நலன்களைப் பெறுகின்றனர். இத்தகைய நகரங்களில் பயணம் மேற்கொள்வது, ஒரே நகரில் பயணம் மேற்கொள்வது போன்றது. பயணிகளின் வாழ்க்கை வழிமுறை, நேரம் மற்றும் வீடுகளை வாங்கும் திட்டம் முதலியவை இதனால் மாற்றப்பட்டு வருகின்றன. ஒரு நகரில் பணி புரிந்து மற்ற நகரில் வாழ்ந்து வரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த புதிய தொரு வாழ்க்கை வழிமுறை ஏற்கனவே உருவாகியுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040