மணல் மற்றும் புழுதி புயலைத் தடுக்கும் சர்வதேச மாநாடு 3ஆம் நாள் திங்கள்கிழமை ஈரான் தலைநகர் டெஹ்ரானில் துவங்கியது. ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அலுவலகத்தின் இயக்குநர் எரிக் சோல்ஹெய்ம் இம்மாநாட்டில் உரையாற்றியபோது நீண்டகாலமாக, மணல் மற்றும் புழுதி புயல், சுற்றுச்சூழல், காலநிலை, சுகாதாரம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஏற்படுத்திய தாக்கத்தில் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்று தெரிவித்தார். மணல் மற்றும் புழுதி புயல் தடுப்பு, பாலைவனமயமாக்கத் தடுப்பு ஆகிய துறைகளில் சர்வதேச சமூகம் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
குபுஜி பாலைவனப் பகுதியில் சீனாவின் கட்டுப்பாட்டு மாதிரியை, சோல்ஹெய்ம் சிறப்பாக பரிந்துரை செய்துள்ளார். சீன அரசு சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதையும், மணல் மற்றும் புழுதி புயலைத் தடுப்பதில் முனைப்பான முயற்சிகளை மேற்கொள்வதையும், இந்த முன்மாதிரி வெளிக்காட்டுகிறது. இது உலகமளவில் கற்றுக்கொள்ளத்தக்கது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அலுவலகத்தால் உறுதிபடுத்தப்பட்ட "உலக பாலைவனச் சுற்றுச்சூழல் பொருளாதார முன்னோட்ட மண்டலமாக குபுஜி பாலைவனப் பகுதி திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.