• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-ரஷிய அரசுத் தலைவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை
  2017-07-05 09:12:39  cri எழுத்தின் அளவு:  A A A   

ரஷியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினும் 4ஆம் நாள் செவ்வாய்கிழமை மாஸ்கோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும், இவ்வாண்டில் நடத்திய 3ஆவது பேச்சுவார்த்தையாகும். சீனா-ரஷியா இடையேயான நெடுநோக்கு வாய்ந்த பன்முகமான ஒருங்கிணைப்புக் கூட்டுறவை ஆழப்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சந்திப்பின்போது பேசுகையில்

2013ஆம் ஆண்டு மார்ச் திங்கள் அரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு, , நான் பயணமாக சென்ற முதல் நாடு ரஷியாவாகும். இது வரை, 6 முறை ரஷியாவில் பயணம் மேற்கொண்டுள்ளேன். அரசுத் தலைவர் புதினுடன் 22 முறைகள் சந்தித்துள்ளேன். சீன-ரஷிய உறவு உயர் நிலையில் இருப்பதையும் அதன் சிறப்பினையும் இவை வெளிக்காட்டுகின்றன என்றார்.

உயர்நிலை இரு தரப்பு நம்பிக்கை மற்றும் முழுமையான ஒத்துழைப்பு முறை ஆகியவை, ரஷிய-சீன உறவில் உள்ள பெரும் மேம்பாடுகளாகும். அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த்து என்று புதின் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு, நாம் பொது கவனம் செலுத்தும் விவகாரமாகும். தவிர, முக்கிய சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்களில் தொடர்பையும் ஒருங்கிணைப்பையும் எவ்வாறு நெருக்கமாக்குவது பற்றியும் அச்சுறுத்தலையும் அறைகூவலையும் கூட்டாக சமாளிப்பது பற்றியும் முக்கியமாக விவாதித்தோம்.

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், நெடுநோக்கு வாய்ந்த பன்முகமான ஒருங்கிணைப்புக் கூட்டுறவை மேலும் ஆழப்படுத்தும் கூட்டறிக்கையில், இரு நாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட்டனர். சமத்துவம் மற்றும் நம்பிக்கை, ஒன்றுக்கொன்று ஆதரவு அளிப்பது, பொது செழுமை, தொடர்ச்சியான நட்பு ஆகியவை உள்ளடங்கிய சீன-ரஷிய உறவை மேம்படுத்தி வளர்க்க வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் பல்வேறு நாட்டு மக்களுக்கும் நன்மை கொண்டு வர வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், தற்போதைய உலகச் சூழ்நிலை, மற்றும் முக்கிய சர்வதேச விவகாரங்கள் பற்றிய இரு நாட்டுத் தலைவர்கள் பொதுவான நிலைப்பாட்டை விளக்கிக் கூறினர். உலக நிர்வாக அமைப்புமுறையை முழுமைப்படுத்தவும், பயங்கரவாதம் உள்ளிட்ட உலகளாவிய அச்சுறுத்தல் மற்றும் அறைகூவலை கூட்டாக சமாளிக்கவும் பாடுபட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040