சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினுடன், ஜூலை 4ஆம் நாள், மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடத்தினார். சீன-ரஷிய நட்புறவையும், இரு தரப்பு உறவின் வளர்ச்சியையும், இருவரும் பாராட்டினர். இரு நாடுகளும், கைகோர்த்துக்கொண்டு முயற்சி செய்து, தலைமுறை நட்புறவு வாய்ந்த சீன-ரஷிய பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளி உறவை வளர்த்து, இரு நாட்டின் மக்கள் மற்றும் உலகின் பல்வேறு நாட்டு மக்களுக்கும் நன்மை புரிய வேண்டும் என்று இருவரும் தெரிவித்தனர். (பூங்கோதை)