5வது பிரிக்ஸ் நாடுகளின் கல்வி அமைச்சர்களின் கூட்டம் 5ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. எதிர்காலத்தில் கல்வித் துறை ஒத்துழைப்புக்கான பணித் திட்டமான பெய்ஜிங் கல்வி அறிக்கையில், பிரிக்ஸ் நாடுகளின் 5 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிக் குழுவின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர். இவ்வறிக்கை மற்றும் இக்கூட்டத்தில் எட்டியுள்ள பொது கருத்துகளின்படி, பிரிக்ஸ் நாடுகளின் கல்வித் துறை ஒத்துழைப்பு, உயர் நிலை கல்வி துறை மட்டும் இலிருந்து அடிப்படை கல்வி துறையிலும் மேற்கொள்ளப்படும். தனிப்பட்டத் திட்டப்பணிகளிலிருந்து பன்நோக்கத் திட்டப்பணிக்கு கல்வித் துறையின் ஒத்துழைப்பு நீடிக்கப்படும். மேலும், கல்வியிலிருந்து, கூட்டு அறிவியல் ஆராய்ச்சி, தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுதல், மனிதப் பண்பாட்டுப் பரிமாற்றத்திலிருந்து இந்த ஒத்துழைப்பு துறை ஆழமாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிக்ஸ் நாடுகளின் கல்வி ஒத்துழைப்பு, தலைசிறந்த மற்றும் நியாயமான கல்வியை முன்னேற்றுவது என்பது இக்கூட்டத்தின் தலைப்பாகும். பெய்ஜிங் கல்வி அறிக்கையின்படி, பிரிக்ஸ் நாடுகளின் இணையப் பல்கலைக்கழகங்களுக்கிடையில் கல்வியை மேற்கொண்டு, அறிவியல் ஆய்வு மற்றும் புத்தாக்கத் துறையிலான ஒத்துழைப்புக்கு ஆதரவளித்து, பிரிக்ஸ் நாடுகளின் பல்கலைக்கழகங்கள், பிரிக்ஸ் நாடுகளின் பல்கலைக்கழக ஒன்றியத்தில் சேர ஊக்குவிக்கப்படும். பல்வகை மொழிகள் கல்வி மற்றும் பண்பாட்டு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம், வரலாறு மற்றும் பண்பாட்டுத் துறைகளில் பல்வேறு நாடுகள் ஒன்றுடன் ஒன்று அறிந்துகொள்வது விரைவுபடுத்தபடும்.
பிரிக்ஸ் நாடுகளின் கல்வி ஒத்துழைப்புக்கான பணித் திட்டமாக பெய்ஜிங் கல்வி அறிக்கை மாறும் என்று சீனக் கல்வி அமைச்சர் சான் போவ் செங் தெரிவித்தார். அவர் கூறியதாவது
இக்கூட்டத்தில் எட்டியுள்ள சாதனைகள், பெய்ஜிங் கல்வி அறிக்கையில் நன்றாக வெளிபடுத்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
இளைஞர்களின் கோடைப் பயிற்சி முகாம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு, இளைஞர்களின் பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் தொடர்பை விரைவுபடுத்த பெய்ஜிங் கல்வி அறிக்கை ஊக்குவிக்கிறது. மேலதிகமான புலமைப் பரிசுகளை பிரிக்ஸ் நாடுகள் வழங்கி, உறுப்பு நாடுகளின் மாணவர்கள், மற்ற உறுப்பு நாடுகளுக்குச் சென்று கல்வி பயிலும் வாய்ப்புக்களைப் பெறலாம்.
பெய்ஜிங் கல்வி அறிக்கை, பிரிக்ஸ் நாடுகளின் கல்வி ஒத்துழைப்புக்கான புதிய மைல் கல்லாகும் என்று இந்திய மனித வள வளர்ச்சி அமைச்சர் ஜவாடேகர் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது
கல்வித் துறையில் மேலதிகமான அறிக்கைகளை நாங்கள் எட்டியுள்ளோம். எங்களுடைய அறிவுத்திறமை மற்றும் கண்ணோட்டங்கள் இவ்வறிக்கையின் மூலம் வெளிபடுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.