சீனாவின் ஷான் ஷீ மாநிலத்தின் பாவ் சீ நகரையும் கன் சூ மாநிலத்தின் லன் சோ நகரையும் இணைக்கும் உயர் வேக இருப்புப் பாதை, 9ஆம் நாள் இயங்க துவங்கியது. சீனாவின் கிழக்கு, நடு, மேற்கு ஆகிய பகுதிகளிலுள்ள உயர் வேக இருப்புப் பாதையுடன் இப்பாதை இணைக்கப்பட்டுள்ளது. 401 கிலோமீட்டர் நீளமுடைய உயர் வேக இருப்புப் பாதை, அங்கிருந்து 2300 கிலோமீட்டர் தொலைவான சீன சின் சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் உருமுச்சி நகரைச் சென்றடையும்.
இந்த உயர் வேக இருப்புப் பாதை, 2012ஆம் ஆண்டு கட்டியமைக்கப்படத் தொடங்கியது. இதன் நீளம் 401 கிலோமீட்டர். இயங்கும் வேகம் மணிக்கு 250 கிலோமீட்டராகும். சீனாவின் வடமேற்கு பகுதி, சீனாவின் உயர் வேக இருப்புப் பாதை வலையத்தில் சேர்வதை, இது காட்டுகிறது என்று லன்சோ தொடர் வண்டி ஆணையத்தின் பயணியர் பிரிவின் துணைத் தலைவர் பூ ச்சிங் சூங் தெரிவித்தார்.
திட்டத்தின் படி, இந்தப் பாதையில், உயர் வேகத் தொடர் வண்டி, பேருந்து போன்று இயங்கும். அதாவது, தினமும், 42 தொடர் வண்டிகள் இப்பாதையில் ஓடும். லன்சோ நகரிலிருந்து, பெய்ஜிங், ஷாங்ஹாய், குவாங்சோ, வூஹான், ஹாங்சோ, சூ சோ ஆகிய சீனாவின் முக்கிய நகரங்களினை உயர் வேக தொடர் வண்டி மூலம் அடையலாம். இது குறித்து, லன் சோ தொடர் வண்டி ஆணையத்தின் அதிகாரி மா தாவ் பேசுகையில், தற்போது, இப்பாதையால் லன்சோ நகரிலிருந்து சீனாவின் நடுப்பகுதியிலுள்ள நகரங்களுக்குச் செல்லும் நேரம் குறைந்துள்ளது என்றார்.
இந்த உயர் வேக இருப்புப் பாதை கட்டியமைக்கப்பட்ட பிறகு, சீனாவின் நடுப்பகுதியிலுள்ள மனித மூலவளங்கள், தகவல் ஆகியவை, சீனாவின் மேற்கு பகுதிக்கு எளிதாக கிடைக்கும். சீனாவின் மேற்குப் பகுதியிலுள்ள பொருளாதார வளர்ச்சிக்கு இது துணை புரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உயர் வேக இருப்புப் பாதையில், 81 பாலங்கள், 60க்கு மேலான சுரங்க பாதைகள் கட்டியமைக்கப்பட்டன. கட்டியமைக்கப்பட்ட போக்கில் நிறைய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.
(கலைமணி)