• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இவ்வாண்டின் முற்பாதியில் சீன தொழில் நிறுவனங்கள் அதிகரிப்பு
  2017-07-13 15:10:36  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தேசிய தொழில் மற்றும் வணிக நிர்வாகம் 13ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், இவ்வாண்டின் முற்பாதியில் சந்தை நிலைமை பற்றி விவரிக்கப்பட்டது. இக்காலத்தில், நாடளவில் புதிதாக பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. அது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 11.1 விழுக்காடு அதிகம். இதில் சேவைத் துறையின் அதிகரிப்பு வேகம் குறைந்துள்ள போதிலும், மிக விரைவான அதிகரிப்பைக் கண்டு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 33.5 விழுக்காடு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

13ஆம் நாள் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, இவ்வாண்டின் முற்பாதியில் புதிதாக நிறுவப்பட்ட நிறுவனங்கள் விரைவாக அதிகரித்து வருகிறது. முதலீடு மற்றும் தொழில் நடத்துவதன் மீதான சமூக ஆர்வமும் உயர் நிலையில் தொடர்கிறது.(வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040