சர்வதேச விண்வெளி பூகோள இயற்பியல் துறைக்கான உயர் நிலை அறிவியலாளர் ஹுவாங் தா நியன், செழுமையான வெளிநாட்டு வாழ்க்கையை கைவிட்டு, சீனாவுக்கு திரும்பியவராவார். அவர் தலைமை தாங்கிய 400 அறிவியலாளர்கள் அடங்கிய ஆய்வுக் குழு, பல துறைகளில் நிறைய சாதனைகளை பெற்றுள்ளது. சீனாவின் விண்வெளி பூகோள இயற்பியல், மூழ்கிக் கலன் ஆகிய துறைகளிலுள்ள அறிவியல் சிக்கல்களைச் சமாளித்துள்ளார். நீண்டகாலமாக அறிவியல் துறை சார்ந்து கடினப்பணிகளில் ஈடுபட்டு வந்ததால், 2017ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் நாள், 58 வயதான ஹுவாங் தா நின் இறந்து போனார். அவரின் இறப்பு அவருடைய சக பணியாளர்கள், மாணவர்கள், துணையாளர்கள் ஆகியோருக்குப் பெரும் துயரை அளித்துள்ளது.
சீனாவின் வடகிழக்குப் பகுதியில் புகழ் பெற்ற சாங்சுன் நிலவியல் கழகத்திலிருந்து படம் பெற்ற அவர், பிரிட்டனில், முனைவர் படம் பெற்ற பெருமைக்குரியவர். இதையடுத்து, பிரிட்டன் கேம் பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் எ ஆர் கேஸ்க் எனும் பூகோள பெளதிகவியல் நிறுவனத்தின் ஆய்வுப்பிரிவின் தலைவராக பணி புரிந்தது. அவர், செழுமையான வெளிநாட்டு வாழ்க்கையை கைவிட்டு, தாய்நாட்டுக்கு திரும்பியதற்கான காரணம் என்ன? பலரைப் போன்று, இந்தக் கேள்விக்கான விடை, ஹுவாங் தா நியனின் மாணவரான சோ வென் யுவேக்கும் புரியவில்லை. அவர் கூறியதாவது—
ஒருமுறை ஆசிரியரிடம், நீங்கள் தாய்நாட்டுக்கு உறுதியாக திரும்பியதற்கான காரணம் என்ன? என்று நான் கேட்டேன். அதற்கு அவர், வெளிநாட்டில் தொடர்ந்து படித்து ஆய்வு செய்யும் வாய்ப்பை எதேச்சையாக பெற்றேன். வெளிநாட்டில் கல்வி கற்ற பின், தாய்நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட்ட ஒன்று தான் என்று அவர் கூறினார் என்றார்.
2009ஆம் ஆண்டு, ஹுவாங் தா நியன் தாய்நாட்டுக்கு திரும்பினார். அதோடு, சீனாவில் அவர் கடினமாக வேலை செய்யத் துவங்கினார். ஜீலின் பல்கலைக்கழக்கத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்திலுள்ள பலகை ஒன்றில், அவருடைய ஓராண்டுக்கான பணித் திட்டம் எப்போதும் இடம்பெற்றிருக்கும். விடியற்காலை 2,3 மணிக்குக் கூட, அவருடைய அலுவலக விளக்குகள் ஒளிந்து கொண்டிருக்கும். ஒரு நாள், இந்த விளக்கு எரியவில்லை எனில், ஹுவாங் தா நியன் நிச்சயமாக வெளி ஊரில் வேலை செய்கிறார் என்று பொருள் என்று அவருடைய செயலாளர் வாங் யு ஹன் கூறினார்.
(கலைமணி)