• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை அதிகரிப்பு
  2017-07-13 16:53:29  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வாண்டின் முற்பாதியில் சீனாவின் ஏற்றுமதித் தொகை 7 லட்சத்து 21 ஆயிரம் கோடி யுவானை எட்டி, 15 விழுக்காடு அதிகரித்தது. ஏற்றுமதித் தொகை 5 லட்சத்து 93 ஆயிரம் கோடி யுவானை எட்டி, 25.7 விழுக்காடு அதிகரித்தது.

மேலும், இக்காலத்தில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளுடனான சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, கடந்த ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததை விட 23.4 விழுக்காடு அதிகரித்து, சீன அந்நிய வர்த்தகத்தின் ஒட்டுமொத்த அதிகரிப்பை விட உயர்ந்துள்ளது.

சீன சுங்கத்துறை தலைமை பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவாங் சொங்பிங் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், வெளிநாட்டுத் தேவையின் மீட்சி, இக்காலத்தில் சீன அந்நிய வர்த்தகம் சீராக வளர்வதற்கான முதன்மைக் காரணமாகும் என்று தெரிவித்தார்.(வான்மதி)


1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040