சீனாவில் அதிகரித்து வரும் முதியோரின் எண்ணிக்கையால், அவர்களுக்கான சேவை நிறுவனங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், சமூக ஆற்றலுக்கு ஊக்கமளித்து, மேலதிகமான தனியார் நிறுவனங்கள் இத்துறையில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது.
சீனத் தேசிய புள்ளிவிபர ஆணையம் வெளியிட்ட புள்ளிவிபரங்கின் படி, 2016ஆம் ஆண்டில், 60 வயதுக்கு மேலான முதியோரின் எண்ணிக்கை 23 கோடியாகும். இத்தொகை, சீன மக்கள் தொகையில் 16.7 விழுக்காடு ஆகும். அவர்களில், குழந்தைகளுடன் சேர்ந்து வாழாமல், தனித்து வாழ்பவர்களின் எண்ணிக்கை, 10 கோடியாகும். இந்நிலைமையின் படி, தற்போது சீனாவில் குறிப்பாக நகரப் பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தின் படுக்கை மிகவும் வரவேற்கப்படுகின்றது.
சீனப் பொதுத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிபரங்களின் படி, 2015ஆம் ஆண்டுக்குள், சீனாவில் அமைக்கப்பட்ட முதியோர் இல்லங்களின் படுக்கை எண்ணிக்கை 66 இலட்சத்து 98 ஆயிரமாகும். இப்புள்ளி விவரத்தின் அடிப்படையில் பார்த்தால், ஆயிரம் முதியோருக்கு 30.3 படுக்கைகள் மட்டும் உள்ளன. தற்போது இன்னமும் நிறைய முதியோர் இல்லங்களும் படுக்கைகளும் தேவைப்படுகின்றன.
இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குச் சீனாவின், பல்வேறு பிரிவுகளும் பாடுபட்டு வருகின்றன. பெய்ஜிங் நகராட்சி, முதியோருக்கான சேவைகளை வலுப்படுத்தி வருகின்றது. அவர்களின் வாழ்க்கையில் உதவியளிப்பது, உணவு சமைப்பது, ஆரோக்கியத்துக்கான ஆலோசனை, பொழுதுபோக்கு முதலிய சேவைகளை முதியோருக்கு வினியோகிக்கலாம்.
கடந்த ஆண்டின் இறுதியில், முதியோருக்கு சேவை அளிக்கும் சந்தைக்கான ஒரு சலுகைக் கொள்கையை சீன அரசுவை வெளியிட்டது. முதியோர் இல்லங்களை உருவாக்கும் அலுவல் பணியை இச்சலுகை கொள்கை குறைத்துள்ளது. 2020ஆம் ஆண்டில், முதியோருக்கு சேவை அளிக்கும் சந்தையின் தரத்தை உயர்த்தும் நோக்கத்தை நனவாக்க வேண்டும் என்பது இப்பணிக்கான முக்கிய அம்சமாகும்.
இதைத் தவிர்த்து, நிலம், நிதியுதவி, மனித மூலவள பயிற்சி ஆகிய துறைகளில், முதியோர் இல்லங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று இத்துறையினர்கள் தெரிவித்தனர்.
(கலைமணி)