ருமேனியத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்பிடி, இந்த ராணுவ பயிற்சி ஜூலை 11 முதல் 20ஆம் நாள் வரை, பல்கேரியா, ருமேனியா, ஹங்கேரி ஆகிய மூன்று நாடுகளில் நடைபெற்று வருகின்றது. நேட்டோவின் 22 உறுப்பு நாடுகள் மற்றும் கூட்டாளி நாடுகளைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரம் படைவீரர்கள் இந்த ராணுவ பயிற்சியில் கலந்து கொண்டுள்ளனர். ஐரோப்பியப் பிரதேசப் படைப்பிரிவுகளின் விரைவான அணித்திரட்டல் சக்தியையும், அவற்றின் எச்சரிகை அச்சுறுத்தல் சக்தியையும் வெளிப்படுத்துவது இப்பயிற்சியின் நோக்கமாகும்.
இவ்வாண்டு கருங்கடற்பரப்பில் 18 முறைகள் ராணுவ பயிற்சியை நேட்டோ நடத்தியுள்ளது. 23 நாடுகளைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் படைவீரர்கள் இப்பயிற்சிகளில் கலந்து கொண்டுள்ளனர். சபர் கார்டியன் 2017 எனும் ராணுவ பயிற்சி, இவற்றில் அளவில் மிக பெரிய ஒன்றாகும். (மீனா)