சீனத் தேசிய நிதிப் பணிக் கூட்டம் 14,15 நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் இதில் கலந்து கொண்டு, முக்கிய உரை நிகழ்த்தினார்.
நிதி என்பது ஒரு நாட்டின் முக்கிய மையப் போட்டியாற்றலாகும் என்றும், நிதித் துறையின் பாதுகாப்பு தேசியப் பாதுகாப்பில் முக்கிய இடம் வகிக்கின்றது என்றும் அவர் வலியுறுத்தினார்.
ரயில் பொருளாதாரத்துக்குச் சேவை புரிதல், நிதித் துறையில் ஏற்படக் கூடிய அபாயங்களைத் தடுத்து கட்டுப்படுத்துதல், நிதித் துறையிலான சீர்திருத்தத்தை ஆழமாக்குதல் ஆகிய மூன்று கடமைகளில் ஈடுபட்டு, நவீன நிதி தொழில் நிறுவனத்துக்கான அமைப்புமுறையை முழுமையாக்கி, நிதிச் சந்தை அமைப்புமுறையை மேம்படுத்தி பொருளாதாரம் மற்றும் நிதித் துறையின் சீரான வளர்ச்சியை நனவாக்க வேண்டும் என்று ஷி ச்சின்பீங் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.(வாணி)