அறிவியல் தொழில் நுட்பப் புதுமைக்குச் சிறப்பாக ஆதரவான சீனாவின் முதலாவது வங்கியான ச்சுங் குவான்சூன் வங்கி, ஜூலை 16ஆம் நாள் பெய்ஜிங்கில் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. பெய்ஜிங்கில் முதலாவது அரசு சாரா வங்கி இதுவாகும்.
இந்த வங்கி, 2016ஆம் ஆண்டின் டிசம்பர் 19ஆம் நாள், சீன வங்கி ஒழுங்குமுறை ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்று, 2017ஆம் ஆண்டின் ஜூன் 16ஆம் நாள் சோதனை ரீதியான செயல்படத் துவங்கியது. ஜூலை 16ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.(பூங்கோதை)