• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நுகர்வு
  2017-07-18 15:52:43  cri எழுத்தின் அளவு:  A A A   

தற்போது, நுகர்வு, சீனப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய உந்து சக்தியாக மாறியுள்ளது. சீனப் பொருளாதார அதிகரிப்புக்கு ஆதரவு ரீதியான அதன் பங்களிப்பு மேலும் வலுவாக இருக்கிறது என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் செய்தியாளர் கூட்டத்தில் 18ஆம் நாள் தெரிவிக்கப்பட்டது. சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் யன் பெங்செங் இது பற்றி பேசுகையில்

"கடந்த மூன்று ஆண்டுகளில், பொருளாதார வளர்ச்சிக்கு நுகர்வு பங்காற்றும் விகிதம் முறையே, 48.8, 59.7 மற்றும் 64.6விழுக்காடு ஆகும். இவ்வாண்டின் முதல் 6 திங்களில் இந்த விகிதம், 63.4 விழுக்காட்டை எட்டியது. முதலீட்டின் பங்கு விகிதத்தை விட, அது 30.7விழுக்காடு அதிகம். நுகர்வு, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய உந்து சக்தியாக மாறியுள்ளது என்றார்"

நுகர்வு துறையின் பங்களிப்பு அதிகரித்து வரும் நிலையை ஒப்பிடும்போது, சீனாவில் நிலைச் சொத்துக்கான அரசு சாரா முதலீடு குறைந்து வருகிறது. சீன அரசவையின் வளர்ச்சி ஆய்வு மையத்தின் உதவி ஆய்வாளர் ஸி சூஜீ இது பற்றி கூறுகையில், முதலீடு மந்தமாக இருக்கும் பின்னணியில், இவ்வாண்டின் முற்பாதியில் சீனப் பொருளாதாரம் தொடர்ந்து 6.9விழுக்காடு அதிகரித்துள்ளது. சீனப் பொருளாதாரத்தின் உள்ளார்ந்த ஆற்றல் வலுவாகி வருவதையும். பொருளாதாரக் கட்டமைப்பு இடைவிடாமல் மேம்பட்டு வருவதையும் இது குறிக்கிறது என்று கருத்து தெரிவித்தார்.

அண்மையில், சீனாவின் பல வாரியங்கள் நுகர்வை விரிவாக்குவதற்கான 3 முக்கிய ஆவணங்களைக் கூட்டாக வெளியிட்டன என்று யன் செங்பெங் தெரிவித்தார். கிராம சுற்றுலா தொழில் வளர்ச்சியை எடுத்துக்காட்டாக கொண்டு அவர் கூறியதாவது

"ஆவணத்தில் வகுக்கப்படும் இலக்குகளின்படி, 2017ஆம் ஆண்டு நாடு முழுவதும், கிராம சுற்றுலா துறையில் சுமார் 55ஆயிரம் கோடி யுவான் முதலீடு செய்யப்பட வேண்டும். ஆண்டுக்கு 250 கோடி சுற்றுலா பயணங்கள் செய்யப்படும். கிராம சுற்றுலா நுகர்வுத் தொகை, ஒரு லட்சத்து 40ஆயிரம் கோடி யுவானை எட்ட வேண்டும். இதன் மூலம் சுமார் 90 இலட்சம் விவசாயிகள் பயன் பெற வேண்டும்" என்றார் அவர்.

யன் செங்பெங் செய்தியாளர் கூட்டத்தில் மேலும் குறிப்பிடுகையில்

வறுமை நிவாரணம் மற்றும் வறுமை ஒழிப்பு, பொதுச் சேவைத் திறனை மேம்படுத்துதல், புதுமை செய்யும் திறனை உயர்த்துதல், தொழில் நிறுவனங்களின் தொழில் நுட்ப மேம்பாட்டை ஆதரித்தல் ஆகியவற்றுக்கு கடந்த சில ஆண்டுகளில் சீனாவில் நிறைய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். சீனப் பொருளாதாரக் கட்டமைப்பு இடைவிடாமல் மாற்றப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகிறது. சீனப் பொருளாதாரம் தற்போதைய சீரான வளர்ச்சியை தொடர்ந்து நிலைநிறுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040