• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ் நாடுகளின் அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்கம் பற்றிய 5ஆவது அமைச்சர் நிலைக் கூட்டம்
  2017-07-19 09:45:51  cri எழுத்தின் அளவு:  A A A   
பிரிக்ஸ் நாடுகளின் அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்கம் பற்றிய 5ஆவது அமைச்சர் நிலைக் கூட்டம் 18ஆம் நாள் ச்செஜியாங் மாநிலத்தின் ஹாங்சோ நகரில் நடைபெற்றது. புத்தாக்கத்தின் தலைமையில் ஒத்துழைப்பை ஆழமாக்குவது என்ற தலைப்பில், கொள்கை பரிமாற்றம், குறிப்பிட்ட துறையிலான ஒத்துழைப்பு, பல தரப்பு ஆய்வு திட்டப்பணிக்கான கூட்டு நிதியுதவி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் பல முக்கிய சாதனைகள் பெறப்பட்டுள்ளன.

உலக மக்கள் தொகையில் 42 விழுக்காடு கொண்ட பிரிக்ஸ் நாடுகள் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கு செய்த நிதி ஒதுக்கீடும், அறிவியல் தொழில் நுட்பப் பத்திரிகைகளில் வெளியிட்ட கட்டுரைகளும் உலகளவில் 17 மற்றும் 27 விழுக்காடு வகிக்கின்றன. உலக அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்க ஒத்துழைப்பில் முக்கிய ஆற்றலாகத் திகழும் பிரிக்ஸ் நாடுகளின் இந்த அமைச்சர் நிலைக் கூட்டம், உலக புத்தாக்க மேலாண்மையில் ஆற்றும் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நடப்புக் கூட்டத்தில், பிரிக்ஸ் நாடுகளின் அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்கம் பற்றிய அமைச்சர் நிலைக் கூட்டம் முக்கிய அமைப்பு முறையாக வலுப்படுத்தப்பட்டுள்ளது. புத்தாக்கப் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை மேற்கொள்ளும் முக்கியத்துவத்தை உறுதி செய்யும் ஹாங்சோ அறிக்கை வெளியிடப்பட்டது என்று சீன அறிவியல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் வான் காங் எடுத்துக்கூறினார்.

பிரிக்ஸ் நாடுகளின் புத்தாக்க ஒத்துழைப்புக்கான செயல் திட்டமும் இக்கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின்படி, அரசு சார் மற்றும் தனிநபர் கூட்டுறவு உள்ளிட்ட புத்தாக்க ஒத்துழைப்பை பிரிக்ஸ் நாடுகள் வலுப்படுத்தி, அறிவியல் தொழில் நுட்பப் பூங்கா மற்றும் தொழில் நுட்ப மாற்றம் தொடர்பான ஒத்துழைப்புக்கு ஊக்கமளித்து, இளைஞர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில் நடத்தலுக்கான கூட்டுறவின் உருவாக்கத்தை முன்னேற்றி, அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கத்துக்கான முதலீட்டுக்கு ஆதரவளிக்கும். இத்திட்டத்தின் நடைமுறையாக்கம் குறித்து வான் காங் கூறுகையில், இத்திட்டத்தின் நடைமுறையாக்கத்தைத் தூண்டி, பிரிக்ஸ் நாடுகளிடையே புத்தாக்க நெடுநோக்கு, கொள்கை மற்றும் அனுபவம் தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை முன்னேற்றும் வகையில், ஏற்கனவே உள்ள அமைப்பு முறையின் கீழ் புத்தாக்க பணிக் குழுவை உருவாக்குவோம் என்று தெரிவித்தார்.

பிரிக்ஸ் நாடுகளின் அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்கம் பற்றிய 6ஆவது அமைச்சர் நிலைக் கூட்டமும், 8ஆவது உயர் அதிகாரி கூட்டமும் தென்னாப்பிரிக்காவின் ஏற்பாட்டில் நடைபெறும் என்று நடப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பிரிக்ஸ் நாடுகளின் அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்கம் பற்றிய முதலாவது அமைச்சர் நிலைக் கூட்டம் 2014ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. 3 ஆண்டுகளின் வளர்ச்சியுடன், இவ்வமைப்பு முறை பக்குவம் அடைந்து வருகிறது. தற்போது அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கத் துறையில் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு குறிப்பிட்ட காலத்துக்குரிய முன்னேற்றம் அடைந்துள்ளது.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040