மே திங்கள் சீனா வைத்துள்ள அமெரிக்க அரசுக் கடன் பத்திரத்தின் மதிப்பு 1000 கோடி அமரிக்க டாலர் அதிகரித்து, ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 220 கோடி அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. சீனாவின் அமெரிக்க அரசுக் கடன் பத்திரம் வைப்பு அளவு 4 மாதங்களாகத் தொடர்ந்து அதிகரித்துள்ளது என்று அமெரிக்த நிதி அமைச்சகம் 18ஆம் நாள் வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.
மே திங்கள் இறுதிவரை, அமெரிக்காவுக்கு கடன் வழங்கும் நாடுகள் வைத்துள்ள அமெரிக்க அரசுக் கடன் பத்திரத்தின் மொத்த தொகை சுமார் 6 லட்சத்து 12 ஆயிரத்து 360 கோடி அமெரிக்க டாலராகும். இது ஏப்ரல் திங்களில் இருந்ததை விட அதிகம்.(வான்மதி)