• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஈரான் அணு ஆயுத உடன்படிக்கை பற்றிய சீனாவின் ஆதரவு
  2017-07-22 16:51:28  cri எழுத்தின் அளவு:  A A A   

21ஆம் நாள் ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, சீனா, ஜெர்மனி ஆகிய 6 நாடுகள், ஈரானுடன், , ஈரான் அணு ஆயுத பன்முக உடன்படிக்கை பற்றிய கூட்டு ஆணையத்தின் 8வது கூட்டத்தில் கலந்துகொண்டன. சீன வெளியுறவு அமைச்சின் அதிகாரி வாங் ஜுன் தலைமை தாங்கிய சீன பிரதிநிதிக் குழு இக்கூட்டத்தில் கலந்துகொண்டது.

பன்முக உடன்படிக்கைக்கு சீனா உறுதியாக ஆதரவு அளிக்கும் என்றும் தற்போதைய நிலைமையில், பல்வேறு தரப்புகள், அரசியல் விருப்பத்தில் ஊன்றி நின்று, கடப்பாட்டை நிறைவேற்றி, சர்ச்சையைச் சரியாக சமாளித்து, இவ்வுடன்படிக்கையை செயல்படுத்துவதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் வாங் ஜுன் தெரிவித்தார்.

(கலைமணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040