உலக பொருளாதாரம் பற்றிய கண்ணோட்டம் என்ற அறிக்கையில் புதுப்பிக்கப்படும் பகுதியை உலக நாணய நிதியம் 24ஆம் நாள் திங்கள்கிழமை மலேசியாவின் தலைநகர் கோலாம்லம்பூரில் வெளியிட்டது. அதன்படி, இவ்வாண்டு மற்றும் அடுத்த ஆண்டில் சீனாவின் பொருளாதார அதிகரிப்பு முறையே 0.1 மற்றும் 0.2 விழுக்காடு அதிகரித்து, 6.7 விழுக்காடாகவும் 6.4 விழுக்காடாகவும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (வாணி)