• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன ராணுவப் படையின் சீர்த்திருத்தம்
  2017-07-24 18:40:48  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வாண்டு சீன மக்கள் விடுதலை ராணுவப் படை உருவாக்கப்பட்ட 90வது ஆண்டு நிறைவு ஆகும். இதற்காக 24ஆம் நாள், செய்தியாளர் கூட்டம் ஒன்றை சீன அரசவை செய்தி அலுவலகம் நடத்தியது. இக்கூட்டத்தில், சீன மத்திய ராணுவக் கமிட்டி மற்றும் சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் பொறுப்பாளர்கள் சீன ராணுவப் படையின் வளர்ச்சி நிலைமையை அறிமுகம் செய்தனர்.

கடந்த சில ஆண்டுகளில், சீனத் தேசிய பாதுகாப்பு பணி மற்றும் ராணுவப் படை நிறைய சாதனைகளை பெற்றுள்ளன. ராணுவப் படை சீர்திருத்த்த்தை எடுத்துக்காட்டாக கொண்டு, 2015ஆம் ஆண்டு நவம்பர் திங்களில், சீன மத்திய ராணுவக் கமிட்டி கூட்டங்களை நடத்தி, தேசிய பாதுகாப்பு பணி மற்றும் ராணுவப் படையின் சீர்திருத்தத்தை ஆழமாக்கும் கடமையைப் பரவல் செய்தது. தற்போது இச்சீர்திருத்தம் சரியாக நடைபெற்று கொண்டிருக்கிறது. முக்கிய துறைகளிலும் முக்கிய கட்டங்களிலும் முன்னேற்றமடைந்துள்ளது என்று 24ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சின் செய்திதொடர்பாளர் ஊ ச்சியன் கூறினார்.

ராணுவப் படையின் சீர்திருத்தம், போராற்றலைப் பாதிக்கும் என்று ஒரு சிலர் கருதுகின்றனர். இது குறித்து, சீன மத்திய ராணுவக் கமிட்டி கூட்டு தளபதிகள் தலைமையகத்தின் போர் ஆணையத்தின் துணை தலைவர் சோ சங் பிங் கூறுகையில், இராணுவம் எப்போதும் தயார் நிலையில் உள்ளது. எனவே நிச்சயமாக வெற்றி பெறும் என்ற நிலைமையில் சீன ராணுவப் படை எப்போதுமே இருக்கிறது என்றார்.

தவிரவும், மனித நேய மூலவளம், பின்னணி சேவை ஆகிய துறைகளில், சீன ராணுவப் படை, பல கொள்கைகளை வெளியிட்டது. ராணுவப் படைக்கும் பொது மக்களுக்குமிடையிலான பரிமாற்றங்களையும் தொடர்புகளையும் சீன ராணுவப் படை வலுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
(கலைமணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040