25ஆம் நாள் புடாபெஸ்ட்டில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் கூட்டமைப்பின் 2017 போட்டியின் ஆடவர் 200 மீட்டர் சுதந்திர பாணி நீச்சல் இறுதிச் சுற்றில், சீன விளையாட்டு வீரர் சுன் யாங் ஒரு நிமிடம் 44.39 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் அவர், ஆசிய சாதனையை முறியடித்தார்.