18 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுடைய கடற்கரை கொண்ட சீனா, 30 இலட்சம் சதுரகிலோமீட்டர் கடற்பரப்பை நிர்வகிக்கிறது. பண்டைகாலத்தில் சீனாவின் கடற்படை வலிமையற்றது. ஆனால் சீன மக்கள் விடுதலை ராணுவப் படையின் கடற்படை உருவாக்கப்பட்ட 68 ஆண்டுகளுக்கு பிறகு, சீன கடற்படை உலகின் பல்வேறு பெருங்கடல்களில் பயணம் மேற்கொண்டுள்ளது. ஏதென் வளைகுடாவில் பயணம் மேற்கொண்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வணிக கப்பல்களால், நம்பத்தக்க காப்பாளராக சீன கடற்படை அழைக்கப்படுகிறது.
சீன கடற்படையின் கிழக்கு கடல் அணியின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று, கடமையைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இதைப் போன்ற கடமை, நிர்ந்தரமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த கப்பல் அணியின் தகுநிலை சிறப்பாக இருந்ததால், எல்லா கடமைகளை அவசரமாக நிறைவேற்ற வேண்டும். போருக்கான பயிற்சியின் தரம் அதிகரித்து வருகின்றது என்று இந்நீர்மூழ்கிக் கப்பலின் தலைவர் யு பிங் செய்தியாளருக்கு தெரிவித்தார்.
அதேவேளை, சீன கடற்படை, அதிக தொலைவில் கடலில் பயிற்சி மேற்கொண்டு வரும் அளவை அதிகரித்து வருகின்றது. நூற்றுகணக்கான போர் கப்பல்களும் விமானங்களும் தொலைவான கடற்பகுதியில் பயிற்சி மேற்கொண்டன. இதை சீன கடற்படை, கண்காணித்து சுற்றி வருவது, வெளிநாட்டு போர் கப்பல்களையும் விமானங்களையும் கண்காணிப்பது ஆகியவற்றை ஆண்டுக்கு நூற்றுக்கு மேலான முறைகளில் மேற்கொண்டது. முக்கிய கடற்பகுதியில் சீன கடற்படை நிரந்தரமாக கட்டுப்படுத்தி கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேசமயமாக்க படையாக, சீன கடற்படை, தொலைவான கடலில் பாதுகாப்பு அளிப்பது, கூட்டு ராணுவப் பயிற்சி, சர்வதேச மீட்புதவி, மருத்துவ சேவை அளிப்பது, வெளிநாடுகளிலுள்ள சீனர்களை பாதுகாப்பாக அழைத்து வருவது ஆகிய கடமைகளில் பங்காற்றி வருகின்றது. சீன கடற்படை சர்வதேச கட்டுப்பாட்டை நிறைவேற்றி, சர்வதேச சமூகத்திற்கு பாதுகாப்பு சேவையை அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
(கலைமணி)