பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
2017-07-28 09:13:19 cri எழுத்தின் அளவு: A A A
பிரிக்ஸ் நாடு செய்தித் தொடர்பு அமைச்சர்களின் 3ஆவது கூட்டம் 27ஆம் நாள் சேச்சியாங் மாநிலத்தின் ஹாங்சோ நகரில் நடைபெற்றது. எண் வழி பொருளாதாரக் காலத்தில் தகவல் செய்தித் தொடர்பு தொழில் நுட்பத்தின் புத்தாக்கமும் ஒருங்கிணைந்த வளர்ச்சியும் இக்கூட்டத்தின் தலைப்பாகும். பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்புச் சந்தை மிக பெரியது என்று சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் துணை அமைச்சர் லியூ லீ ஹுவா தெரிவித்துள்ளார். தகவல் செய்தித் தொடர்பு தொழில் நுட்பத்தை கூட்டாக முன்னேற்றி, பிரிக்ஸ் நாடுகளின் சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குச் சிறப்பாகச் சேவை புரிய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். (வாணி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய