பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகளின் 7ஆவது கூட்டத்தில் கலந்து கொண்ட வெளிநாட்டுப் பிரதிநிதிக்குழுத் தலைவர்களை சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் 28ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்து பேசினார். திறப்பு, இணக்கம், ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி என்ற பிரிக்ஸ் எழுச்சியை பின்பற்றி, மேலும் நெருக்கமான பிரிக்ஸ் கூட்டாளியுறவை கையோடு கைகோர்த்து கட்டியமைத்தால், பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு இரண்டாவது பொன்னிற பத்து ஆண்டுகளை வரவேற்கும் என்று ஷீ ச்சின்பிங் இச்சந்திப்பின் போது வலியுறுத்தினார்.
பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, நமது ஐந்து நாடுகளின் நலன்களைப் பேணிகாத்து, விரிவாக்கும் அதே வேளையில், புதிய ரக சர்வதேச உறவை உருவாக்குவதற்கு அர்த்தமுள்ள ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது என்று ஷீ ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய நிலைமையில், பிரிக்ஸ் நாடுகள் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறைகளிலான அறைகூவல்களைக் கூட்டாக சமாளித்து, உலக விவகாரங்களில் பிரிக்ஸ் நாடுகளின் செல்வாக்கை உயர்த்த வேண்டும் என்று ரஷியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரிதிநிதிக்குழுத் தலைவர்கள் தெரிவித்தனர். (மீனா)