சீன அரசின் கடன் இடர்ப்பாடு கட்டுப்படுத்தக்கூடும். 2017ஆம் ஆண்டின் ஜூன் திங்களுக்குள், உள்ளூர் அரசுகளின் மீச்ச கடன் தொகை 15 லட்சத்து 86 ஆயிரம் கோடி யுவானாகும். திட்டமிடப்பட்ட 18 லட்சத்து 82 ஆயிரம் கோடி கடன் உச்சவரம்பை இது தாண்டவில்லை என்று சீனத் துணை நிதி அமைச்சர் லியூ வெய் ஜூலை 28ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக, சீன உள்ளூர் அரசுகளின் கடன் நிர்வாகம் மற்றும் கண்காணிப்புக்கான மூடிய-சுழற்சி மேலாண்மை முறைமை உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அரசுகளின் கடன் இடர்ப்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் இது குறிப்பிடத்தக்க பயனைப் பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். (பூங்கோதை)