• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மக்கள் விடுதலை படையின் அணி வகுப்பு
  2017-07-30 18:24:00  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வாண்டு ஆகஸ்ட் திங்கள் முதல் நாள், சீன மக்கள் விடுதலை படை நிறுவப்பட்ட 90ஆம் ஆண்டு நினைவு நாளாகும். இதை முன்னிட்டு ஜுலை 30ஆம் நாள் சூழ்க பயிற்சி தளத்தில் ராணுவ அணி வகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. எதிரிகளின் அனைத்து ஊடுருல்களையும் தோற்கடிக்கும் ஆற்றலும் நம்பிக்கையும் சீனப் படைக்கு உண்டு என்று ராணுவ அணி வகுப்பைப் பார்வையிட்ட சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் தெரிவித்தார்.

1949ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பிறகு, சீன மக்கள் விடுதலை படை நாளை முன்னிட்டு நடைபெறும் முதலாவது ராணுவ அணி வகுப்பு இதுவாகும். சூழ்க பயிற்சி தளம் ஆசியாவில் மிகப் பெரிய நவீன ராணுவப் பயிற்சி தளமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் பல்வகை படைப் பிரிவுகளைச் சேர்ந்த 12ஆயிரம் படை வீரர்களும், 600க்கும் அதிகமான படைக்கலங்களும், 100க்கும் அதிகமான போர் விமானங்களும் இந்த ராணுவ அணி வகுப்பில் பங்கேற்றன. அவற்றில் யுன்-20, சியேன்-20, துங்ஃபங்-26, தரையிலிருந்து பாயும் அணு ஏவுகணை முதலிய படைக்கலங்கள் அதிக கவனத்தை ஈர்த்தன. புதிய காலத்தில் புதிய படைப் பிரிவின் ஆற்றலும், தகவல் மயமாக்கக் காலத்தில் பல்வகை படைப் பிரிவுகள் கூட்டு நடவடிக்கையில் ஈடுபடும் திறனும் இந்த அணி வகுப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்று சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் இதில் கூறியதாவது அமைதியை அனுபவிப்பது மக்களின் தேவையாகும். அமைதியைப் பேணிக்காப்பது படையின் கடமையாகும். சீன மக்கள் விடுதலை படையை உலகில் முன்னணியில் இருக்கும் வகையில் கட்டியமைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

முக்கிய நினைவு நாட்களில் ராணுவ அணி வகுப்பு நடத்துவது பல நாடுகளின் வழக்கமாகும். ஆண்டுத் திட்டத்தின்படி சீனா ராணுவப் பயிற்சி நடத்துகின்றது. இது அண்டை நாட்டு நிலைமையுடன் தொடர்புடையதில்லை என்று சீனத் தேசிய பாதுகாப்பமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஞாயிற்றுக் கிழமை தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040