• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2017ஆம் ஆண்டு முற்பாதியில் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி நிலைமை
  2017-07-31 16:16:12  cri எழுத்தின் அளவு:  A A A   

2017ஆம் ஆண்டின் முற்பாதியில் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி நிலைமையை 31ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன அரசவையின் செய்தி அலுவலகம் அறிமுகம் செய்தது.

இவ்வாண்டு முற்பாதியில், சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி தொகை வேகமாக அதிகரித்துள்ளது. இத்தொகை, 13 இலட்சத்து 14 ஆயிரம் கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததை விட 19.6 விழுக்காடு அதிகம். கடந்த இரு ஆண்டுகளில் இத்தொகை தொடர்ந்து குறைந்து வந்த நிலைமையில் தற்போது மாற்றம் காணப்பட்டுள்ளது. குறிப்பாக, இவ்வாண்டு முற்பாதியில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை நாடுகளுடனான ஏற்றுமதி இறக்குமதி தொகை, பெருமளவில் அதிகரித்து வருகின்றது. ஆசியான், இந்தியா, ரஷியா ஆகிய பிரதேசத்துடனும் நாடுகளுடனும் ஏற்றுமதி இறக்குமதி தொகை 21.9, 30.4, 33.1 விழுக்காடாக அதிகரித்தது.

இவ்வாண்டு முற்பாதியில், அந்நிய முதலீட்டைச் சீனா சீராக பயன்படுத்தியது. 44 ஆயிரத்து 150 கோடி யுவான் மதிப்புள்ள அந்நிய முதலீட்டைச் சீனா பயன்படுத்தியது என்று சீன துணை வணிக அமைச்சர் ஜியன் க் மிங் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில், சில சீனத் தொழில் நிறுவனங்கள், வெளிநாடுகளில் கண்மூடித்தனமாக முதலீடு செய்தன. இவ்வாண்டு முற்பாதியில், சீனாவின் தொடர்புடைய வாரியங்கள், இது பற்றி சோதனை செய்து, வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கு வழிகாட்டின. புள்ளிவிபரங்களின் படி, இவ்வாண்டு முற்பாதியில், சீனத் தொழில் நிறுவனங்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்த தொகை, 33 ஆயிரத்து 110 கோடி யுவானை எட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 42.9 விழுக்காடு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், சீனாவின் முதலீட்டு சூழலை வெளிப்புறம் கவலைப்படுத்தி வருகின்றது. இது குறித்து, சீன துணை வணிக அமைச்சர் ஜியன் க் மிங், பேசுகையில், அந்நிய முதலீட்டைச் சீனா சீராக பயன்படுத்தி வருகின்றது. அது மட்டுமல்ல, அன்னிய முதலீட்டை பயன்படுத்தும் அமைப்பு முறையையும் மேம்படுத்தி வருகின்றது என்றார் அவர்.
(கலைமணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040