• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மக்கள் விடுதலை படை உருவாக்கப்பட்ட 90ஆவது ஆண்டு நிறைவு
  2017-08-01 15:20:36  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆக்ஸ்ட் முதல் நாள், சீன மக்கள் விடுதலை படை உருவாக்கப்பட்ட 90ஆவது ஆண்டு நிறைவு ஆகும். இதை முன்னிட்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி, சீன அரசவை, சீன மத்திய ராணுவக் கமிட்டி ஆகியவை கொண்டாட்ட கூட்டம் ஒன்றை நடத்தின. சீன நாட்டின் மாபெரும் மறுமலர்ச்சியையும் சீனப் பொது மக்களின் மேலும் செழுமையான வாழ்க்கையையும் நனவாக்கும் வகையில், சீன மக்கள் விடுதலை படையை, உலகின் உச்ச தரமான படையாக கட்டியமைக்க வேண்டும் என்று சீன மத்திய ராணுவக் கமிட்டித் தலைவர் ஷீ ச்சின் பிங் தெரிவித்தார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் 7 நிரந்தர உறுப்பினர்களும், பெய்ஜிங்கிலுள்ள தலைவர்களும், சமூகத்தின் பல்வேறு துறையினர்களும் ஆகிய 3000 பேர் இக்கொண்டாட்ட கூட்டத்தில் கலந்துகொண்டனர். காலை 10 மணிக்கு, தொடங்கிய இக்கூட்டத்தை சீன தலைமையமைச்சர் லீ க் ச்சியாங் தொடங்கி வைத்தார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை, சீன மக்கள் விடுதலை படையின் குறிக்கோளைப் பேணிக்காக்கும் முக்கிய உத்தரவாதமாகும். உன்னத நம்பிக்கை, சீன மக்கள் விடுதலை படையின் எழுச்சியாகும் என்று ஷீ ச்சின் பிங் தெரிவித்தார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, சீன மக்கள் விடுதலை படை, நெடுநோக்கு வழிகாட்டும் முறையை புதுப்பித்து, புதிய நிலைமையில், ராணுவ நெடுநோக்கு திட்டத்தை வகுத்து வருகிறது. ராணுவப் படையின் அரசியல் ஆக்கப்பணியை வலுப்படுத்தி, தேசியப் பாதுகாப்பு மற்றும் படையின் சீர்திருத்தத்தை ஆழமாக்கி வருகிறது என்று ஷீ ச்சின் பிங் கூறினார்.

உலக அமைதியை உருவாக்குவதிலும், உலக வளர்ச்சியை முன்னேற்றுவதிலும், சர்வதேச ஒழுங்கைப் பேணிக்காப்பதிலும் சீனா எப்போதுமே பங்காற்றும் என்று ஷீ ச்சின் பிங் தெரிவித்தார்.
(கலைமணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040