2017ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக துறை அமைச்சர்களின் மாநாடு, ஆகஸ்டு 1-ஆம் நாள் சீனாவின் ஷாங்காய் மாநகரில் தொடங்கியது. முதலீட்டை எளிமைப்படுத்துதல், வர்த்தக வளர்ச்சியை ஊக்குவித்தல், பொருளாதாரத் தொழில் நுட்பங்களின் ஒத்துழைப்பு மற்றும் திறன் கட்டுமானத்தை மேம்படுத்துதல், பல தரப்பு வர்த்தக அமைப்புமுறையை ஆதரித்தல் ஆகியவற்றில் இம்மாநாட்டில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
சீன வணிக அமைச்சர் சோங் ஷான் உரையாற்றுகையில்
2006ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு தொடங்கியது முதல் தற்போது வரை, புதிய சந்தைகள் மற்றும் வளரும் நாடுகள் ஒத்துழைப்புடன் ஒன்றுக்கு ஒன்று நலன்களை தரும முன்மாதிரியாக "பிரிக்ஸ்" விளங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், உலகப் பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைந்து வந்துள்ளது. ஆனால், உறுதியற்ற மற்றும் நிலையற்ற காரணிகள் இன்னும் அதிகமாக காணப்படுகின்றன. அறைகூவல்களை எதிர்நோக்கும் இச்சூழலில், பிரிக்ஸ் நாடுகள், பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேலதிக அளவில் வலுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.