இவற்றில், பிரிக்ஸ் நாடுகளின் முதலீட்டு எளிமையாக்க ஒத்துழைப்புத் திட்டம், உலகில் முதலீடு வசதிமயமாக்கத் துறையில் எட்டியுள்ள முதல் சிறப்பு ஆவணமாக திகழ்கிறது.
இது குறித்து, சீன வணிகத் துறையின் சர்வதேசப் பிரிவின் தலைவர் சாங்ஷாவ்காங் கூறுகையில், இத்திட்டம், உலக முதலீட்டுக் கொள்கையின் எளிமையாக்க ஒருங்கிணைப்புக்கு வழிமுறைகளை விளைவிக்கும் என்று கூறினார்.
தற்போது, மின்னணு வணிக அலுவல், உலகில் மிக அதிகமான உயிராற்றல் கொண்ட வணிக முறைகளில் ஒன்றாகும். அதனால், பிரிக்ஸ் நாடுகளின் மின்னணு வணிக அலுவல் ஒத்துழைப்பு முன்மொழிவை பிரிக்ஸ் நாடுகளின் அமைச்சர்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர். வர்த்தக அதிகரிப்பு, தொழிற்துறையின் தீவிரத்தன்மை ஆகியவற்றை முன்னேற்றி, வளரும் நாடுகள், நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள் உலக மதிப்புத் தொடரில் ஒன்றிணைய இது துணை புரியும்.(ஜெயா)