ஆசியாவின் வங்கியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட 2017 சீன எதிர்கால நிதி உச்சி மாநாடு, 3ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் உறுப்பினரும், நிதி சேவை ஆணையத்தின் தலைவருமான பார்னே ஃபிராங்க், உரை நிகழ்த்துகையில், நிதி சந்தையில் நுகர்வோரின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாப்பது, நிதித் துறையில் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் முக்கிய பகுதியாகும் என்று கூறினார். தற்போது சீனாவின் நிதி நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகை, நிதித் துறையின் நிதானத்தைப் பாதிக்க முடியாது என்று அவர் கருதினார்.(ஜெயா)