• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்திய படை எல்லையை மீறியது குறித்த சீனாவின் நிலைப்பாடு
  2017-08-04 18:42:50  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்திய எல்லை பாதுகாப்பு படை, சீன-இந்திய எல்லையில் உள்ள சிக்கிம் பகுதியைத் தாண்டி சீனாவின் அரசுரிமைப் பகுதிக்குள் நுழைந்தது குறித்த உண்மை மற்றும் சீனாவின் நிலைப்பாடு எனும் அறிக்கையை சீன வெளியுறவு அமைச்சகம் ஆகஸ்டு 2ஆம் நாள் வெளியிட்டது.

இந்திய ராணுவம் அத்துமீறி சீனாவின் எல்லைக்குள் நுழைந்த உண்மையை சர்வதேச சமூகத்திடம் தெளிவுபடுத்தும் வகையில், சீன அரசின் நிலைப்பாட்டை இந்த அறிக்கை பன்முகங்களிலும் விளக்கி கூறுகிறது. இந்திய அரசு எவ்வித நிபந்தனையுமின்றி எல்லையில் ஊடுருவியுள்ள இந்திய படையினரைத் திரும்ப பெற வேண்டும் என்றும், அத்துமீறல் செயல்பாட்டை முழுமையாக விசாரணை செய்ய வேண்டும் என்று சீனா கோரியுள்ளது. கூடிய விரைவில் இந்த சம்பவத்தை முடிவுக்கு கொண்டு வந்து, இரு நாட்டு எல்லைப் பகுதியின் அமைதிச் சூழ்நிலையை மீட்க வேண்டும் என்று சீனா விரும்புகிறது.

சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட இந்த அறிக்கையில், இந்திய அரசு ஏற்றுக்கொண்ட சீன-இந்திய எல்லையின் சிக்கிம் பகுதி தொடர்பான ஆவணம், சீன-இந்திய எல்லைப் பிரச்சினைகளின் சந்திப்பில் இந்திய தரப்பு தாக்கல் செய்த ஆவணங்கள் ஆகியவை பற்றிய தரவுகள் இடம்பெற்றுள்ளன.

இது பற்றி, சீன சமூக அறிவியல் கழகத்தின் சாங் யொங் பான் பேசுகையில்,

சீன-இந்திய தரை எல்லைப் பிரச்சினையில் இரு தரப்புக்குரிய சர்ச்சைகள், எல்லையின் கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் குவிந்துள்ளன. இருப்பினும், கடந்த பல ஆண்டுகளில் சிக்கிம் பகுதியில் எவ்வித சர்ச்சையும் ஏற்படவில்லை. தற்போது, இந்தியா, தனது அத்துமீறலுக்காக பல்வகைக் காரணங்களை கூறி வருகின்றது. ஆனால், இந்தியாவின் இக்காரணங்களுக்கு வரலாற்று ரீதியான ஆதரவு இல்லை என்று கூறினார்.

சிக்கிம் பகுதியில் இந்திய படை அத்துமீறி நழைந்தது தொடர்பாக, இந்தியா தனது செயலுக்கு பல்வகை சாக்குப்போக்குகளை சொல்லி வருகின்றது. மேலும், சீனாவின் சாலைப் பணி, கடும் பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தும் என்று தனது அத்துமீறலுக்கு காரணம் கூறி வருகிறது.இந்த கூற்றுக்கு உண்மை மற்றும் சட்டம் ரீதியான ஆதரவு ஏதுமில்லை. நீண்ட காலமாக, இந்திய ராணுவம், Doka La டோக்கா லா நுழைவாயில் மற்றும் அதன் அருகிலுள்ள இந்தியப் பகுதிகளில் சாலைகள் உள்ளிட்ட பல்வகை அடிப்படை வசதிகளை கட்டியமைத்துள்ளது. அதோடு, மேலதிகமாக, எல்லைப் பகுதியில் பதுங்குகுழி உள்ளிட்ட ராணுவ வசதிகளையும் இந்தியா நிறுவியுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சகம் 2ஆம் நாள் வெளியிட்ட நிலைப்பாடு பற்றிய அறிக்கையில், அண்டை நாடான இந்தியாவுடன் நட்புறவை வளர்ப்பதற்கு சீன அரசு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டுறவு மற்றும் இரு நாட்டு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு, இந்திய அரசு, எல்லைப் பிரச்சினை உடன்படிக்கையை கடைப்பிடித்து, சீனாவின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கைகயில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் இந்த விருப்பம் பற்றி சீன நவீன சர்வதேச உறவு ஆய்வு நிறுவனத்தின் தெற்காசிய ஆய்வகத்தின் தலைவர் ஹு ஸிஷெங் பேசுகையில்

எதிரெதிர் நிலை ஏற்பட்ட பிறகு சீன அரசின் மனப்பான்மை மற்றும் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. தவறு செய்தவர்கள், தங்களின் தவற்றைச் சரிசெய்து கொள்ள வேண்டும். தற்போதுள்ள முட்டுக்கட்டை நிலையை தீர்க்கும் வகையில், சீனா கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், கட்டுப்பாட்டிற்கும் ஓர் எல்லை உண்டு.

சீனா அமைதியை நேசிக்கிறது. ஆனால், இத்தகைய அத்துமீறல் எப்போதும் தொடர்ந்து வருவதை, சீனா அனுமதிக்காது. பிற வழிமுறைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பாக, இயன்ற அளவில், அமைதியான தூதாண்மை முறையில் தற்போதைய பிரச்சினையைத் தீர்க்க சீன அரசு இன்னும் விரும்புகிறது என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040