• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்கா கப்பலிலிருந்து காணமல் போன வீரரைக் கண்டறிய-சீனக் கடற்படையுடன் கூட்டாகத் தேடுதல் பேட்டை
  2017-08-05 15:18:03  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஸ்டெதாம் என்னும் விரைவு கப்பலிலுள்ள வீரர் ஒருவர் ஆகஸ்டு முதல் நாள் முற்பகல் காணாமல் போனார். அப்போது, இக்கப்பல் தென் சீனக் கடலின் ஹூவாங்யன் தீவிலிருந்து தென் மேற்கில் 100க்கு மேலான கடல் மைல் தூரமான பகுதியில் பயணம் மேற்கொண்டிருந்தது. அதற்கு அருகிலான கடல் பரப்பில் கடமையைச் செயல்படுத்திய சீனக் கடற்படையின் லியூ சோ கப்பல், மனித நேய உதவி மேற்கொண்டு, அந்த வீரரைக் கண்டறிய அமெரிக்கக் கப்பலுடன் இணைந்து செயல்பட்டது.

ஆகஸ்டு 4ஆம் நாள் இவ்வீரருக்கான மீட்புப் பணியை நிறுத்துவதாக அமெரிக்கத் தரப்பு அன்று தெரிவித்தது. (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040