ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்காகப் பிரிட்டன் 3500 கோடி முதல் 4700 கோடி அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்தக் கூடும் என்று பிரிட்டனின் சன்டை டிஸ்பேட்சு எனும் செய்தி ஏடு 5ஆம் நாள் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் தொடர்புடைய கட்டணத்தை 6400 கோடியிலிருந்து 10 ஆயிரத்து 900 கோடி அமெரிக்க டாலராக உயர்த்தியுள்ளதாக முன்தைய செய்தியில் தெரிவித்திருந்தது. ஆனால், கணிசமான கட்டணம் செலுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரினால், தொடர்புடைய பேச்சுவார்த்தையில் பிரிட்டன் விலகக் கூடும் என்று ஐரோப்பிய ஒன்றியித்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் விவகாரத்துக்குப் பொறுப்பான பிரிட்டனின் மூத்த அமைச்சர் டேவி டேவிஸ் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான 3ஆவது சுற்று பேச்சுவார்த்தை இத்திங்களின் பிற்பாதியில் நடைபெறவுள்ளது.