பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கு அமெரிக்க அரசு 4ஆம் நாள் விருப்ப விண்ணப்பத்தை ஒப்படைத்தது. இதற்கு பல நாடுகள் ஏமாற்றம் அடைவதாகத் தெரிவித்துள்ளன. காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவது தவறான செயலாகும் என்று பல நாடுகளின் அரசு அதிகாரிகளும் அறிஞர்களும் செய்தி ஊடகங்களும் குற்றம் சாட்டின.
உலக வெப்பம் அதிகரித்தலைச் சமாளிக்கும் வழிமுறைகளில் பாரிஸ் ஒப்பந்தம் மிக முக்கியமானதாகும் என்று பி.பி.சி 5ஆம் நாள் கூறியது. கடந்த திங்கள் நடைபெற்ற ஜி-20 அமைப்பின் உச்சிமாநாட்டில், காலநிலை மாற்றம் பற்றி அமெரிக்கா மேற்கொண்டுள்ள நிலைப்பாட்டினால் கருத்து வேற்றுமை ஏற்படுத்தியுள்ளது என்று இச்செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டது.
டிரம்பின் இந்த முடிவு எங்கள் பிரிட்டன் மக்களுக்கும் எங்களது குழந்தைகளுக்கும் எங்களது அடுத்த தலைமுறையினர்களுக்கும் நேரடியாக பாதிப்பு ஏற்படுத்தும் என்று பிரிட்டனின் கெம்பிரேக் பல்கலைகழகத்தைச் சேர்ந்த அறிஞர் எமிரி சூக்பெர்க் கூறினார். அமெரிக்க மக்கள் உள்ளிட்ட மனிதர்கள் வெளியேற்றும் ஒவ்வொரு கிராம் கரியமில வாயும் காலநிலைமாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது என்று அவர் குறிப்பிட்டார்.