சீன மத்திய வங்கியின் 7ஆம் நாள் வெளியிட்ட தொடர்புடைய தரவுகளின்படி, ஜூலை திங்கள் இறுதி வரை, சீனாவின் அந்நிய செலாவணி அளவு, ஜூன் திங்களின் இறுதிகாலத்தில் இருந்ததை விட, 2390 கோடி அமெரிக்க டாலர் உயர்ந்துள்ளது. கடந்த 6 திங்கள்காலமாக இது தொடர்ந்து அதிகரித்துள்ளது, அதே நாள், சீனாவின் அந்நிய செலாவணி மேலாண்மை ஆணையம் வெளியிட்ட சர்வதேச வரவு செலவின் சரி சம நிலை பட்டியலின்படி, இவ்வாண்டின் முற்பாதியில், சீனாவில் நாடு கடந்த நிதி புழக்க நிலைமை சீராக மாறியுள்ளது.
இவ்வாண்டு முதல், சீனப் பொருளாதாரத்தின் சீரான, நிதானமான வளர்ச்சி போக்கு தொடரும். பொருளாதாரம் உயர் வேகத்தில் உயர்வதற்கான, மத்திய மற்றும் உயர் நிலை காரணிகள் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் இந்த ஆணையம் தெரிவித்துள்ளது.