• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்காவுக்கு ஐ.நாவின் எச்சரிக்கை
  2017-08-08 10:35:35  cri எழுத்தின் அளவு:  A A A   
பல தரப்புகளின் வர்த்தக விதியை அமெரிக்கா பொருட்படுத்தாமல், வர்த்தக கூட்டாளி மீது ஒரு சார்பான தண்டனை நடவடிக்கைகளை மேற்கொள்வது, கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தும். இது, பகுத்தறிவுக்கு உகந்தது இல்லை என்று ஐ.நாவின் வர்த்தக மற்றும் வளர்ச்சி கூட்டத்தின் பொருளாதார விவகார அதிகாரி லியாங் கோ யொங் 7ஆம் நாள் தெரிவித்தார்.
உலக வர்த்தக அமைப்பு நிறுவப்பட்ட பல ஆண்டுகளில், உலகப் பொருளாதார ஆற்றல் மற்றும் வர்த்தக வடிவங்கள் ஏற்கனவே மாறியுள்ளன. சர்வதேச வர்த்தகத்தில் ஒரு சார்பு நடவடிக்கையை மேற்கொள்வது, வர்த்தக பாதுகாப்பு நடவடிக்கையாகும். அதோடு, இது, பல தரப்பு வர்த்தகத்தை அலட்சியம் செய்யும் செயலாகும் என்று அவர் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040