• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென் சீனக்கடல் பிரதேசம் மீதான வெளி நாடுகளின் பழைய கருத்து
  2017-08-08 15:16:11  cri எழுத்தின் அளவு:  A A A   

7ஆம் நாள், ஆசியான் மற்றும் சீனா ஜப்பான் தென்கொரியா வெளியுறவு அமைச்சர் கூட்டம், கிழக்காசிய உச்சி மாநாட்டின் வெளியுறவு அமைச்சர் கூட்டம், ஆசியான் பிரதேச மன்றத்தின் வெளியுறவு அமைச்சர் கூட்டம் ஆகிய முக்கிய கூட்டங்கள், கிழக்காசிய ஒத்துழைப்பு வெளியுறவு அமைச்சர் கூட்டக்காலத்தில், ஃபிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் நடைபெற்றன. தென் சீனக்கடல் பற்றி சில நாடுகள் வெளியிட்ட உண்மையற்ற கருத்துகள் குறித்து சீனாவின் நிலைப்பாட்டை சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ விளக்கிக் கூறினார்.

மிகச் சமீபத்தில், கிழக்காசிய ஒத்துழைப்பு வெளியுறவு அமைச்சர் கூட்டம் நடைபெற்றது. சீனா மற்றும் ஆசியான் நாடுகளின் கூட்டு முயற்சியுடன், தென் சீனக்கடல் நிலைமை நிதானப்படுத்தப்பட்டது. தொடர்புடைய நாடுகள் மட்டும், பேச்சுவார்த்தையின் மூலம் இச்சர்ச்சையைத் தீரக்கும். தென் சீனக்கடல் செயல் கோட்பாட்டை நாங்கள் வெற்றிகரமாக உருவாக்கி அங்கீகரித்தோம். இவ்வாண்டுக்குள் சரியான நேரத்தில் இக்கோட்பாட்டை நனவாக்குவோம். இந்த வெளியுறவு அமைச்சர் கூட்டத்தில் எட்டப்பட்டுள்ள மிக முக்கிய சாதனை இதுவாகும். தென் சீனக்கடல் பிரதேசத்திலுள்ள நாடுகள், இப்பிரதேசத்தின் நிலைமை சரியான வளர்ச்சி போக்கில் இருப்பதாகக் கருதுகின்றன. ஆனால், இப்பிரதேசத்திற்கு வெளியே உள்ள நாடுகள் இப்படி கருதவில்லை என்று வாங் யீ தெரிவித்தார்.

இதற்கு அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள், வெளியிட்ட கூட்டறிக்கை ஒரு எடுத்துக்காட்டாகும். 6ஆம் நாளிரவில், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகள், தென் சீனக்கடல் பற்றிய கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதில், தென் சீனக்கடலில் ராணுவமயமாக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சீனாவும் பிலிபேன்ஸும், என்றழைக்கப்பட்ட நடுவர் தீர்ப்பு சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்று அவ்வறிக்கை குறித்து வாங் யீ குற்றஞ்சாட்டினார்.

அன்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ஜப்பானின் வெளியுறவு அமைச்சர் தாரோ கோனொவைச் சந்தித்தார். அப்போது, தென் சீனக்கடல் பிரச்சினை பற்றிய சீனாவின் கருத்தை வாங் யீ தெரிவித்தார். தற்போது நிதானமாகி வரும் தென் சீனக்கடல் நிலைமைக்கும், சீனா மற்றும் ஆசியான் நாடுகள் செய்த முயற்சிகளுக்கும் ஜப்பான் மதிப்பு அளித்து, பிரதேச நிதானத்துக்கும் பாதுகாப்புக்கும் பங்காற்ற வேண்டும் என்றும் இதர நாடுகளைப் போல், சர்ச்சையை உருவாக்கக் கூடாது என்றும் வாங் யீ வேண்டுகோள் விடுத்தார்.
(கலைமணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040