சியுச்சேய்கோ, சீனாவின் புகழ்பெற்ற இயற்கைக்காட்சி இடமாகும். இப்போது சுற்றுலாக்காலம் என்பதால் ஏராளமான பயணியர்கள் இங்கே பயணம் மேற்கொண்டிருந்தனர். நிலநடுக்கம் நிகழ்ந்த பிறகு உள்ளூர் அரசு 30 ஆயிரத்துக்கு கூடுதலான பயணியர்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தி வருகிறது. எமது செய்தியாளர் சிச்சுவான் மாநிலத்தின் நிலநடுக்க தடுப்பு பேரிடர் நீக்க பணி ஆணையத்திலிருந்து இத்தகவல் கிடைத்தார். ஒரு பயணியர் செய்தியாளரிடம் கூறியதாவது:
நாங்கள் பெய்ஜிங்கிலிருந்து இங்கே வந்து பயணம் மேற்கொண்டோம். நிலநடுக்கத்திற்குப் பின், வாகனம் மூலம் வழிகாட்டியுடன் வெளியே சென்றோம். நேற்றிரவு சதுரங்கத்தில் தங்கவைக்கப்பட்டோம் என்று குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் மீட்புதவி பணியை மேற்கொள்ள சீனாவின் ராணுவமும் ஆயுதக் காவல் படையும் வீரர்களை அனுப்பியுள்ளன. குறிப்பாக, சீன மேற்குப்பகுதி தரைப்படைப்பிரிவைச் சேர்ந்த 4 ஹெலிகாப்டர்கள் இன்று காலை புறப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்குச் சென்றடைந்துள்ளன.
மேலும், நிலநடுக்கம் நிகழ்ந்த பிறகு பல்வேறு தரப்பும் உடனடியாக அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சீன நிலநடுக்க பணியகத்தின் பணிக்குழு சிச்சுவானுக்குச் சென்றுள்ளது. சீன செஞ்சிலுவை சங்கம் செங்தூ மீட்புதவி மையத்திலிருந்து குடும்ப பை, போர்வை, கூடாரம் உள்ளிட்ட மீட்புதவிப் பொருட்களை அனுப்பியது. செங்தூ ரயில் பணியகம் விரைவாக இருப்புப்பாதை மற்றும் வசதிகளின் நிலைமையை சரிப்படுத்தி வருகிறது.
மேலும், இந்நிலநடுக்கத்திற்கான காரணம் பற்றி, சீன நிலநடுக்க நிலையம் மற்றும் வலைப்பின்னல் மையத்தின் முன்னறிவிப்புப் பிரிவின் தலைவர் சியாங் ஹெய்குன் பேசுகையில், எதிர்காலத்தில் கடும் நில அதிர்வுகள் நிகழும் சாத்தியம் உண்டு. இதனால் தடுப்புப்பணி செவ்வனே செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.