சிங் ஜியாங் வெய்ஹூர் தன்னாட்சி பிரதேசத்தின் ஷீ ஹோ சி நகரிலுள்ள, 40 ஹெக்டர் நிலப்பரப்பான நெல் கழனியில் நீர் இல்லை. ஆனால், நெல் சரியாக வளர்கின்றது. வறட்சியான நிலத்தில் எப்படி நெல் வளர்க்கலாம். சிங் ஜியாங் உற்பத்தி மற்றும் ஆக்கப்பணி குழுமம், தனிச்சிறப்பான தொழில் நுட்பத்தை அறிந்து கொண்டு பயன்படுத்துகின்றது. இக்குழுமம் ஆய்வு செய்த நீர் சிக்கனப்படுத்தும் பாசன தொழில் நுட்பம், மத்திய ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நீர், குழாய் மூலம் நெல்லின் வேருக்கு நேரடியாக கிடைக்கிறது. அது மட்டுமல்ல, நெகிழிப் பையைப் பயன்படுத்தி, நிலத்தை மூட்டது. இதனால், நீர்மம், ஆவியாகாமல் சேமிக்கப்படும். இவை, இந்த நீர் சிக்கனப்படுத்தும் பாசன தொழில் நுட்பத்தின் தனிச்சிறப்பாகும்.
சிங் ஜியாங் உற்பத்தி மற்றும் ஆக்கப்பணி குழுமம், சிங் ஜியாங் வெய்ஹூர் தன்னாட்சி பிரதேசத்தில் 170 அரசாங்க பண்ணைகளை உருவாக்கியது. இந்த அரசாங்க பண்ணைகள் பெரும்பான்மை பாலைவனத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில், இக்குழுமம், நீர் சிக்கனப்படுத்தும் தொழில் நுட்பத்தை ஆய்வு செய்து புதுப்பித்தது.
இந்த தொழில் நுட்பம், விளைச்சல் அளவைப் பெருமளவில் அதிகரித்து வருகின்றது. தற்போது வேளாண் துறையில், சிங் ஜியாங் உற்பத்தி மற்றும் ஆக்கப்பணி குழுமத்தின் சில குறியீடு உலக முதல் தரவரிசையில் வகிக்கின்றது. எடுத்துக்காட்டாக, கோதுமை விளைச்சல் அளவு, ஹெக்டருக்கு 5.1 டனிலிருந்து 8.7 டனுக்கு உயர்த்தியது. சம்பளம், 3 மடங்கு அதிகரித்துள்ளது. பருத்தி விளைச்சல் அளவு, ஹெக்டருக்கு ஒரு டன்னிலிருந்து 2.4 டன்னுக்கு உயர்ந்துள்ளது. அதேவேளை, இத்தொழில் நுட்பத்தின் மூலம், சிங் ஜியாங் உற்பத்தி மற்றும் ஆக்கப்பணி குழுமம் 100 கோடி கன மீட்டர் நீரை சிக்கனப்படுத்தியுள்ளது. நீர்மம் சிக்கனப்படுத்தப்பட்டதோடு, இயற்கை சூழல் மேம்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, சிங் ஜியாங் உற்பத்தி மற்றும் ஆக்கப்பணி குழுமம், சீனாவின் நீர்மம் சிக்கனப்படுத்தும் மாதிரியாக மாறியுள்ளது. இக்குழுமம் உருவாக்கிய நீர்மம் சிக்கனப்படுத்தும் தொழில் நுட்பம், சீனாவின் 29 மாநிலங்களின் 47 இலட்சம் ஹெக்டர் நிலத்தில் பயன்படுத்தப்படுகின்றது. மத்திய ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் 17 நாடுகளின் 10 ஆயிரம் ஹெக்டர் நிலத்தில் பயன்படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
(கலைமணி)